full screen background image

நடிகர் ராம்கி முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘இங்கிலீஷ் படம்’

நடிகர் ராம்கி முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘இங்கிலீஷ் படம்’

சில முன்னணி விளம்பர படங்களை தயாரித்த அனுபவம் கொண்ட R.J. Media Creations நிறுவனம் முதல்முறையாக திரைப்படத் தொழிலில் கால் பதித்திருக்கிறது.

தாங்கள் தயாரிக்கும் முதல் படத்திற்கு ‘இங்கிலீஷ் படம்’ என்று பெயர் வைத்துள்ளார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார். 

இப்படத்தில் ராம்கி, சஞ்சீவ், மீனாட்சி, மதுமிதா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

படம் பற்றி இயக்குநர் குமரேஷ் குமார் கூறும்போது, “இந்த ‘இங்கிலீஷ் படம்’ ஒரு காமெடி த்ரில்லராக வளர்ந்து வருகிறது. நிச்சயம் நம்பி வரும் ரசிகர்களை ஏமாற்றமாட்டோம்.. என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

படத்தில் நடித்துள்ள நடிகர் ராம்கி கூறும்போது, “இப்படத்தில் நான் நாயகனும் கிடையாது. வில்லனும் கிடையாது. ஆனால் இப்படம் என்னை அடுத்த கட்டத்திற்க்கு கொண்டு போக கூடிய படமாக அமையும்..” என்றார்.

படத்தில் நடித்துள்ள நடிகர் சஞ்சீவ் கூறும்போது,  “நான் ‘குளிர் 100’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானேன். அதையும் சேர்த்தும் இதுவரையிலும் ஏழு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளேன். ‘குளிர் 100’ படத்தை தவிர வேறு  எந்த படமும் எனக்கு அடையாளத்தை ஏற்படுத்தி தரவில்லை. ஆனால் இந்த ‘இங்கிலீஷ் படம்’ எனக்கு நல்லதொரு அடையாளத்தை தரும் என்று நான் நம்புகிறேன்.

இந்தப் படத்தில் நான் நடிக்கும் ஒவ்வொரு காட்சியிலும் நான்  ஒரு அறிமுக நடிகனாக என்னை நினைத்து கொண்டுதான் நடித்து வருகிறேன். இப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு எங்கள் படக் குழுவினர் அனைவருக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது..” என்றார். 

இப்போது படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பரபரப்பாக சென்னையில் நடந்து வருகிறது.

        BANNER NAME : R.J.MEDIA CREATION

        DIRECTOR : குமரேஷ் குமார்

        PRODUCER : R.J.M.வாசுகி 

        MUSIC DIRECTOR : M.C.ரிகோ 

        CAMERA MAN :சாய் சதீஷ் 

        EDITOR : M.மகேந்திரன்

        COSTUMER : A.S.வாசன்

        MAKEUP MAN : R.பழனி

        STUNT : விஜய்

        DANCE MASTER : R.சங்கர்

        ART DIRECTOR : A.பழனிவேல்

        STILLS : R.A.பரமசிவம்

        DESIGN : சிவா

        PRO  : M.P.ஆனந்த்

        PRODUCTION MANAGER : ரஞ்சித் 

 

Our Score