full screen background image

‘எங்கேஜ்மெண்ட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது..!

‘எங்கேஜ்மெண்ட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது..!

சுரம் மூவிஸ் மற்றும் ரோடியம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து பிரமாண்டமாக தயாரிக்கும் ‘எங்கேஜ்மெண்ட்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளதை படக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தப் படத்தில் பிரவீர் ஷெட்டி, ஐஸ்வர்யா கவுடா, ராஜகோபால் ஐயர், பால்ராஜ் வாடி, பாவனா, ரஜனி ஸ்ரீகலா, ஷரத் வர்மா, தீப்தி குப்தா, சுஜய் ராம், டிஜே மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு நிறுவனம் – ரோடியம் எண்டர்டெயின்மெண்ட் & சுரம் மூவிஸ், இயக்கம் – ராஜு போனகானி, தயாரிப்பாளர் : ஜெயராம் தேவசமுத்திரம், இணை தயாரிப்பாளர்கள் : லட்சுமிகாந்த்.என்.ஆர், நாராயண சுவாமி.எஸ்., ஒளிப்பதிவு – வெங்கட் மன்னம், இசை – திலீப் பண்டாரி, ரஜத் கோஷ், படத் தொகுப்பு – ரவி கொண்டவீட்டி, இணை இயக்கம் – நாகராஜு தேசாவத், நடன இயக்கம் – ராஜ் பைடே, சண்டை இயக்கம் – டிராகன் பிரகாஷ், கலை இயக்கம் – வெங்கடேஷ் ஆரே, வடிவமைப்பாளர் : லக்கி, பத்திரிக்கை தொடர்பு – ஹஷ்வத், சரவணன்.

தெலுங்கு சினிமாவின் அனுபவமிக்க திரைக்கதை எழுத்தாளரான இயக்குநர் ராஜு போனகானி, அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற கதையை இளமை ததும்பும் காதலோடும், புதிரான கதைக் களத்துடனும் இந்த ‘எங்கேஜ்மெண்ட்’ படத்தை இயக்கியிருக்கிறார்.

ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் இறுதிவரை நடைபெற்று  தற்போது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. தயாரிப்பு தரப்பின் சிறப்பான திட்டம் மற்றும் படக் குழுவினரின் கடினமான உழைப்பே இதற்கு காரணம்.

தயாரிப்பு பணிகள் மற்றும் படப்பிடிப்பின் திட்டமிடல் ஆகியவற்றை மிக கவனமாக கையாண்டதோடு, திட்டமிட்டபடி படப்பிடிப்பை தொடங்கி எந்தவித இடையூறுகளும் இன்றி சரியான நேரத்தில் முழு படப்பிடிப்பையும் வெற்றிகரமாக முடித்ததற்கு இயக்குநர் ராஜு போனகானியை தயாரிப்பாளர் ஜெயராம் தேவசமுத்ரா பாராட்டியதோடு, படத்தின் பின்னணி வேலைகளும் இதே விறுவிறுப்புடன் நடக்க படக் குழுவினருக்கு உற்சாகமளித்துள்ளார்.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் பிரவீர் ஷெட்டியின் நடிப்பு பார்வையாளர்களை மயக்கும் வகையில் இருப்பதோடு, கதாநாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா கவுடாவின் இளமை மற்றும் நடிப்பு ரசிகர்களை முழுமையாக ஆக்கிரமிக்கும் என்று படக் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும், அவர்களின் கதாபாத்திரமும் பேசப்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் படத்தின் வெளியீட்டுக்கு பிறகு அவர்களுக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த ‘எங்கேஜ்மெண்ட்’ திரைப்படம் கூர்க், சிக்மங்களூர், மைசூர், கோவா, மும்பை, சென்னை, ஐதராபாத் மற்றும் உலகின் பல அழகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட மொழி பேசுபவர்களை மட்டும் இன்றி, உலக மக்கள் அனைவரையும் கவரக் கூடிய கதை என்பதால் இப்படத்தை பான் இந்தியா திரைப்படமாக பல மொழிகளில் படக் குழு வெளியிடுகிறது.

Our Score