விஷாலுக்கு ‘எனிமி’ ஆனார் ஆர்யா..!

விஷாலுக்கு ‘எனிமி’ ஆனார் ஆர்யா..!

விஷால் – ஆர்யா இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் புதிய படத்திற்கு ‘எனிமி’(ENEMY) என்று பெயர் வைத்துள்ளார்கள்.

இந்தப் படத்தை மினி ஸ்டூடியோ நிறுவனத்தின் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார்.

ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர், இசை – எஸ்.தமன், கலை இயக்கம் – டி.ராமலிங்கம், படத் தொகுப்பு – ரெய்மண்ட் டெர்ரிக் கிரெஸ்டா, எழுத்து – ஷான் கருப்பசாமி, எஸ்.ராமகிருஷ்ணன், நடன இயக்கம் – பிருந்தா, சண்டை இயக்கம் – ரவி வர்மா, நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.பி.சொக்கலிங்கம், உடைகள் வடிவமைப்பு – ப்ரீத்தா அகர்வால், பாடல்கள் – அறிவு, விளம்பர வடிவமைப்பு – கோபி பிரசன்னா, புகைப்படங்கள் – டி.நரேந்திரன், மக்கள் தொடர்பு – ரியாஸ் அஹமத், தயாரிப்பு – எஸ்.வினோத்குமார், எழுத்து, இயக்கம் – ஆனந்த் சங்கர்.

ஆர்யா விஷாலுடன் இணைந்து ஏற்கெனவே  இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் வில்லனாக நடித்ததில்லை. அவர் விஷாலுக்கு வில்லனாக நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடிக்கவிருக்கிறார். ஆர்யாவுக்கு ஜோடி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’, ‘நோட்டா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கும் 4-வது திரைப்படம் இது.

இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இந்தப் படப்பிடிப்பில் ஆர்யாவும் சில நாட்கள் கலந்து கொண்டார்.

மீண்டும் சென்னையில் 16 நாட்களும், ஊட்டியில் 12 நாட்களும், 32 நாட்கள் மலேசியாவிலும் இதன் படப்பிடிப்பு நடைபெறப் போகிறது.

மலேசியாவில் நடைபெறும் 32 நாட்கள் படப்பிடிப்பு முழுவதிலும் ஆர்யா கலந்து கொள்ளவிருக்கிறார்.

Our Score