full screen background image

‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ படத்தின் டிரெயிலரை நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டார்.

‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ படத்தின் டிரெயிலரை நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டார்.

‘யோகி & பார்ட்னர்ஸ்’ சார்பில் இசையமைப்பாளரும், பாடகருமான ரெஹானா தயாரித்து இருக்கும் திரைப்படம்,  ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’.

கற்பனை கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகி இருக்கும்  இந்த படத்தை ரெஹானாவின் நண்பர்களான சுபா மற்றும் ஆசீர்வாதம்  ஆகியோர் இணை தயாரிப்பு செய்திருக்கின்றனர்.

jayam ravi  

கடந்த பிப்ரவரி 24-ம் தேதி அன்று  ஜெயம் ரவி வெளியிட்ட இந்த படத்தின் டிரைலர், யுடியூப் டிரெண்டிங் வரிசையில் தற்போது இடம் பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

jayam ravi-azar-1

அறிமுக இயக்குநர் வி.விக்னேஷ் கார்த்திக் கதை எழுதி இயக்கி  இருக்கும்   ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ படத்தில் புதுமுகம் அசார் மற்றும்  ‘சூது கவ்வும்’ புகழ் சஞ்சிதா ஷெட்டி முன்னணி கதாப்பாத்திரங்களிலும், யோகி பாபு, மன்சூர் அலி கான், ‘வழக்கு என் 18/9’ புகழ் முத்துராமன், உமா பத்மநாபன், ‘இருக்கு ஆனா இல்ல’ புகழ் ஏதேன், சிங்கப்பூர் தீபன்,  ராமர், டாக்டர் ஷர்மிலி மற்றும் அர்ச்சனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

jayam ravi-vignesh karthick

“எங்களுடைய முதல் தயாரிப்பான இந்த ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ படத்தின் டிரைலரை வெளியிட்ட நடிகர் ஜெயம் ரவிக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

நகைச்சுவை கலந்த காதல் கதையில் உருவாகி இருக்கும்  எங்களது  ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ படத்தின் டிரைலர், எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து, தற்போது யூ டியூப் டிரெண்டிங் வரிசையிலும் இடம் பிடித்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது…”   என்று உற்சாகமாக  கூறுகிறார் படத்தின் தயாரிப்பாளரான ரெஹானா.

Our Score