நாளை ரிலீஸாகவிருக்கும் ‘ஒரு கன்னியும் 3 களவாணிகளும்’ திரைப்படத்தின் டிரெயிலரை பார்த்தபோது ஒரு விஷயம் புரிந்தது..!
படத்தின் டிரெயிலரில் 5 நடிகர்களுக்கு மட்டும் பட்டப் பெயர் கொடுத்து அதை ஸ்டில் பிரேம் செய்து காட்டியிருக்கிறார்கள். நடிகர் அருள்தாஸுக்கு ‘ஹானஸ்ட் ராஜ்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். நடிகர் நாசருக்கு ‘மலேசியன் தாதா’ என்று பெயர். நடிகர் மனோபாலாவுக்கு ‘டீக்கடை சேட்டன்’ என்று பெயர்.. இன்னொரு குண்டு நடிகருக்கு ‘கே.கே.நகர் டபுள் டேன்க்’ என்று பெயர். ஆனால் நடிகர் ‘ஆடுகளம்’ நரேனுக்கு வைத்திருக்கும் பெயர் ‘என்கவுண்டர் மாமா’.
இதில் நரேன் போலீஸ் உயர் அதிகாரியான தோற்றத்தில் இருக்கிறார். அவர் ஒரு என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆபீஸர் என்ற அர்த்தத்தில் பட்டப் பெயர் சூட்டியிருக்கலாம். தப்பில்லை. ஆனால் அந்தப் பெயர் ‘மாமா’ என்றுதான் இருக்க வேண்டுமா என்ன..?
ஏற்கெனவே டிராபிக் போலீஸை ‘மாமா’ என்று அழைத்து இரண்டு தலைமுறைகளுக்கு அதைக் கற்றுக் கொடுத்தாகிவிட்டது. இப்போதும் நடைமுறையில் மாமூல் வாங்கும் போலீஸாரை ‘மாமா’ என்று அழைப்பது தமிழ்நாட்டில் அனைத்து ஊர்களிலும் நடக்கும் விஷயம்.. ஆனால் சில படங்களில் அந்த வசனங்கள் இருந்து, அதனை சென்சார் போர்டு ஆட்சேபித்து வசனத்தை மட்டும் மியூட் செய்ய வைத்திருக்கிறது.
ஆனால் இந்தப் படத்தில் எழுத்தில் காட்டப்பட்டிருக்கும் ‘என்கவுண்ட்டர் மாமா’ என்கிற வார்த்தையை சென்சார் போர்டு எப்படி கண்டு கொள்ளாமல் விட்டார்கள் என்பது தெரியவில்லை..!
படம் நாளைக்கு ரிலீஸாம்..! ஏதோ நம்ம பங்குக்குக் கொஞ்சம் கொளுத்திப் போடுவோம்..! நம்மளால முடிஞ்ச உதவி..!