full screen background image

பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் கதையில் உருவாகும் ‘எனை சுடும் பனி’ திரைப்படம்!

பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் கதையில் உருவாகும் ‘எனை சுடும் பனி’ திரைப்படம்!

எஸ்.என்.எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில், தயாரிப்பாளர் ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரித்துள்ள திரைப்படம் “எனை சுடும் பனி”.

இந்தப் படத்தில் ‘விழித்திரு’, ‘என் காதலி சீன் போடுறா’, ‘வாகை’ ஆகிய படங்களில் நடித்த நட்ராஜ் சுந்தர்ராஜ், கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக உபாசனா நடிக்கிறார்.

இவர்களுடன் பாக்யராஜ், சித்ரா லட்சுமணன், மனோபாலா, தலைவாசல் விஜய், முத்துக்காளை, சிங்கம் புலி, தானீஷ், சுந்தர்ராஜ், பில்லி முரளி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராம் ஷேவா இயக்குகிறார். ஒளிப்பதிவு –  வெங்கடேஷ், இசை – அருள்தேவ், சண்டை இயக்கம் – டேஞ்சர் மணி, படத் தொகுப்பு  – சி.எம்.இளங்கோவன், கலை இயக்கம் – சோலை அன்பு, நடன இயக்கம் – சாண்டி, ராதிகா, பாடல்கள் – ராம் ஷேவா, சரவெடி சரண், வசந்த். நிர்வாக தயாரிப்பு – ஜீவா, பத்திரிக்கை தொடர்பு – கோவிந்தராஜ், தயாரிப்பு ஹேமலதா சுந்தர்ராஜ்.

நட்ராஜ் சுந்தர்ராஜ், உபாசனா இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டில் குடியிருக்கிறார்கள். முதலில் நட்பாக பழகுகிறார்கள். பின்பு அது காதலாக மாறுகிறது. கதாநாயகி வேலைக்குச் செல்லும் பொறுப்பான பெண். கதாநாயகன் ஜாலியாக இருக்கும் இளைஞன். ஐ.பி.எஸ். அதிகாரி தேர்வுக்கு தயாராகி வருகிறார் கதாநாயகன்.

இந்த நிலையில் பொள்ளாச்சியில் பெண்கள் தொடர்ந்து காணாமல் போகிறார்கள். துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறுகிறது. ஒரு பெண்ணின் சடலம் சாலையோரத்தில் கண்டெடுக்கப்படுகிறது. அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் நீதி கேட்டு போராடுகிறார்கள். போலீஸ் இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கிறது. எதிர்பாராதவிதமாக விசாரணை வளைக்குள் கதாநாயகன், கதாநாயகி இருவரும் சிக்குகிறார்கள். விசாரணை தொடங்குகிறது. சைக்கோ, கிரைம், திரில்லர், சஸ்பென்ஸ், லவ் என ‘எனை சுடும் பனி’ விறுவிறுப்பாக செல்கிறது.

விரைவில் இந்த “எனை சுடும் பனி” திரைப்படம் திரைக்கு வருகிறது!

Our Score