full screen background image

ஜோர்டானில் படமாக்கப்பட்ட ஷாஜி கைலாஷின் ‘என் வழி தனி வழி’

ஜோர்டானில் படமாக்கப்பட்ட ஷாஜி கைலாஷின் ‘என் வழி தனி வழி’

பிரபல மலையாளப் பட இயக்குநர் ஷாஜி கைலாஷின் இயக்கத்தில் ‘எல்லாம் அவன் செயல்’ படத்தின் ஹீரோ ஆர்.கே. நடிக்கும் அடுத்த படமான ‘என் வழி தனி வழி’ படத்தின் சில பாடல் காட்சிகளைப் படமாக்க அந்தப் படக் குழுவினர் சமீபத்தில் ஜோர்டான் நாட்டிற்குச் சென்று வந்துள்ளனர்.

அங்கே எடுக்கப்பட்ட ஷூட்டிங் பற்றியும், அந்த நாடு பற்றியும் உடன் சென்று வந்த அப்படத்தின் கதாசிரியரும், வசனகர்த்தாவுமான பிரபாகரன் மிகவும் பிரமிப்பாகப் பேசுகிறார்.

“மம்மி, MISSIION IMPOSSIBLE போன்ற பெரிய பட்ஜெட் ஆங்கில படங்கள் எடுக்கப்பட்ட தேசத்தில் நமது தமிழ்ப் படம் எத்தனை லட்சம் செலவானாலும் பரவாயில்லை, நாம் ஜோர்டானில் shoot  பண்ணலாம் எனும் ஆர்.கே அவர்களின் துணிவுதான், ‘என் வழி தனி வழி’யின்  பாடலை பிரம்மாண்டப்படுத்திய அஸ்திவாரம்.

ஜோர்டானின் தலைநகரம் அம்மான் [Amman] அங்குள்ள விமான நிலையத்திலிருந்து, எங்களின் ‘என் வழி தனி வழி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு குழுவினர் அனைவரும், கதாநாயகன் ஆர்.கே., இயக்குனர் ஷாஜி கைலாஷ் அவர்களுடன் ஒரு பேருந்தில் புறப்பட்டு 7 மணி நேர பயணத்திற்கு பின்  PATRA  எனும் மலைப் பிரதேசத்திற்கு சென்றோம். அங்கு இரவில் 4’c குளிர் இருந்தது.  PATRA-வில் முதல் படபிடிப்பை துவங்கினோம்.

IMGL3587

10 கி.மீ தூரத்திற்கு மேல் நீளமுள்ள திறந்த மலைக்குகை. இரு புறமும் உயர்ந்த மலை நடுவே சூரிய ஒளி நமது கிராமத்து வீடுகளின் முற்றத்திலிருந்து நம் மீது வீசுவது போல் ஒளிக்கிற்றுகளை இதமாக மேலிருந்து தெளிக்கும் உயர்ந்த குகைகள் இந்த light எங்கும் கிடைக்காது என இயக்குனர் கூற பிருந்தா மாஸ்டரின் நடன அமைப்புடன் பாடலின் முதல் காட்சி படமாக்கும்போது அங்கு ஈரான், ஈராக், USA போன்ற பல நாடுகளியிருந்து வந்த சுற்றுலா பயணிகள் அவர் அவர் நாட்டு கொடிகளின் அடையாளங்களுடன் பட்டாம்பூச்சிகள் போல் நடந்து சென்ற குழந்தைகள் அனைவரும் நமது தமிழ்ப் பாடலையும் ஸ்ரீகாந்த்தேவாவின் இசையும் ரசித்து ஆட ஆரம்பித்துவிட்டனர்.

கதாநாயகன் ஆர்.கே., கதாநாயகி பூனம்கவுர் இருவரும் நளினமான அசைவுகளுடன் ஒளிப்பதிவாளர் ராஜரத்தினத்தின் ஒளிப்பதிவில் பாடல் படமாக்கப்பட்டது. ஒவ்வொரு கோணத்திலும் பார்க்கும்போதும் குகையின் ஒவ்வொரு வடிவமும் வெவ்வேறு அழகுடன் தெரிய, நிச்சயம் இது போன்ற ஒரு லொகேஷன் உலகின் எந்தப் பகுதியிலும் இருக்க முடியாது என்னும் எண்ணம் தோன்றியது.

IMGL3249

5000 ஆண்டுகளுக்கு முன் பெரிய அரண்மனையாகவும் மாளிகைகளாகவும் நகரமாகவும் இருந்த இடங்கள் பிரிட்டிஷ்காரர்களால் கைப்பற்றப்பட்டு பின் மக்களை உள்ளே அடைத்து வைத்தும் பலரை சமாதி ஆக்கியும் சிதைத்தும் இன்று சிதைந்த சிற்பங்களாக காட்சியளிக்கின்றது.  இந்த மலையில் எப்படி இந்த தோற்றங்களை வடித்தார்கள்..? எத்தனை சிற்பிகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் எந்த தொழில் நுட்பத்துடன் உயர்ந்த சிற்பங்களை உருவாக்கினார்கள் ஆச்சரியம்! ஆச்சரியம்!! ஆச்சரியம்!!! இத்தகையக ஆச்சரியங்களும் ‘என் வழி தனி வழி’  திரைப்படத்தின் பாடல் காட்சியில் நமது கேமராவிற்குள் பதிவாகிவிட்டது.

PATRA-வில் எங்கள் படபிடிப்பை முடித்து நாங்கள் இரண்டாவதாக வந்த Location VADIRUM தங்க நிற மணல் தங்க நிற மலைகள். மொத்த நீளம் எத்தனை கி.மீ. எனத் தெரியாது. சூரியனை தொட்டு விடலாமோ எனக் கைகள் துடிக்க அங்கு அனைத்து Shot களில் சூரிய கிரகணங்கள்  பளிச்சிடும் கோணங்களாக இயக்குனர் ஷாஜி கைலாஷ் அமைக்க பிருந்தா மாஸ்டரின் மிக அழகான நளினமான நடன அமைப்பால் பாடல் காட்சி படமானது.

IMGL3572

தொடர்ந்து நாங்கள் 8 மணி நேர பயணம் செய்து வந்து சேர்ந்த இடம் ஜோர்டானுக்கும், இஸ்ரேலுக்கும் நடுவில் உள்ள் ‘Dead sea’ எனும் கடல் பகுதி. அங்கு கடல் நீர் எண்ணெய் போல் உள்ளது. அலையே இல்லாத கடல் அந்த கடலின் உப்புக்களிலிருந்து ஆயிரம் மருத்துவ மூலக்கூறுகள் எடுக்கப்படுவதால், அந்த ‘Dead Sea’-ன் உப்பு, வாழும் மக்களைக் காக்கும் வைரம்.

நாங்கள் Dead sea பகுதியில் சூர்ய அஸ்தமனத்தில் [Sun set] பாடல் காட்சியின் ஒரு பகுதியை படமாக்கிக் கொண்டிருந்த பொழுது, கேமராவை சிறிய Helicopter-ல்  பொருத்தி  ‘airel view shot’  எடுத்தோம். திடீரென ஜோர்டான் ராணுவத்தினர் மூன்று மிலிட்டரி ஜீப்புகளில் வந்து எங்களை சூழ்ந்து கொண்டு படப்பிடிப்பை நிறுத்தினர்.

எங்களின் Heli camera  பறந்ததை Satellite ரேடாரில்  observe செய்த இஸ்ரேல் ராணுவம், ஜோர்டான் ராணுவத்திற்கு யாரோ உங்கள் நாட்டின் ‘Dead sea’ பகுதியில் ஒற்றர் விமானத்தில்  Spy Camera-வை பயன்படுத்துகின்றனர் என்று கூற அந்த தகவலின் அடிப்படையில் எங்களை ஜோர்டானின் ராணுவம் சுற்றி வளைத்தது.

IMGL3392

இயக்குனரும் தயாரிப்பாளுரும் ஜோர்டான் அரசிடம் படபிடிப்பு நடத்த பெற்றுள்ள அனுமதியையும். நமது விசா முதல் அனைத்து ஆவணங்களையும் காண்பித்து விளக்கிய பின் அரை மணி நேர தடைக்குப் பிறகு ராணுவ பாதுகாப்புடன் Fly camera பயன்படுத்தக் கூடாது என்ற கட்டுப்பாட்டுடன் மீண்டும் படப்பிடிப்பு நடந்தது.

அடுத்த இரு நாட்கள் எங்கள் படப்பிடிப்பு நடந்த இடம் ஜோர்டான் தலைநகரம் AMMAN. ஹரப்பா, மொகஞ்சதாரோ நகரங்களைப் பற்றி சரித்திரத்தில் படித்துள்ளோம், Amman-ல் இருந்து 60 km  தூரத்தில் உள்ள JARSHA  நகரின்  பிரம்மாண்ட தூண்களும் சிதைந்த மாளிகைகளும் மற்றும் மிகப் பெரிய கற்களால் கட்டப்பட்ட திறந்தவெளி கலையரங்களும், கண்ணுக்கு தெரியும் தூரம்வரை கலைநயம் மிக்க குன்றுகளும் நமக்கு பார்க்க பார்க்க வியக்க வைத்தது.

அங்குள்ள திறந்த வெளி கலையரங்கின் மையத்தில் ஒரு நபர் நிற்கும் அளவிற்கு வட்ட வடிவம் உள்ளது. அங்கு நின்று ஒரு பேச்சாளர் பேசினால் ஒலிபெருக்கி இல்லாமல் கலை அரங்கில் அமர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களும் கேட்கும் அளவிற்கு வியப்பான கட்டிடக் கலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடல் காட்சியின் பல பகுதிகள் பலகோணங்களில் JARSHA-வில் படமாக்கபட்டது. அங்கு படமாக்கப்பட்ட ‘Sun set’ காட்சியுடன் படபிடிப்பும் நிறைவடைந்தது.

Director : Shaji kailash

Dance Master : Brindha

Cameraman : Raja rathinam

Writer : V.Prabhakar

 Spot Editor :  Samjath Mohamad

 Helicam Operator : Harshavardhan

Our Score