full screen background image

எதிர்நீச்சல் டீம் மறுபடியும் களமிறங்குகிறது..!

எதிர்நீச்சல் டீம் மறுபடியும் களமிறங்குகிறது..!

சென்ற வருடம் வெளியான படங்களில் சூப்பர்ஹிட் வரிசையில் இடம் பெற்ற படம் ‘எதிர்நீச்சல்’. இந்தப் படத்தை நடிகர் தனுஷ் தனது சொந்த நிறுவனமான வொண்டர் பிலிம்ஸ் சார்பாக தயாரித்திருந்தார். தனுஷ் மீது தீரா பாசத்துடன் இருக்கும் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் ராக்கெட் வேகத்தில் ஏறுவதற்கு அந்தப் படமும் பெரிதும் உதவியது.. இப்போது அதே யூனிட் மீண்டும் ஒரு முறை இணைகிறதாம்..

படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.  ‘மைனா’, ‘கும்கி’, ‘மான் கராத்தே’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த  சுகுமார் இதற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். ஹீரோயினில் மட்டும் மாற்றம்.. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கப் போவதாகத் தகவல்.

தமிழ்ச் சினிமாவில் இப்போது கதை பஞ்சம்போல், தலைப்புக்கும் பஞ்சமாகவே இருக்கிறது. தலைப்பு வைக்க மிகவும் அலைந்து திரிந்தும் கிடைக்கவில்லையாம். இப்போதைக்கு  ‘டாணா’ என்று வைத்திருக்கிறார்கள். இந்தப் பெயருக்கு சத்தியமாக வரிவிலக்கு கிடைக்காது என்பதால் நிச்சயம் மாறுதல் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது..

என்ன அர்த்தத்தில் இப்படி பெயர் வைத்திருக்கிறார்கள் என்பது படம் பார்த்த பின்புதான் தெரியும்..!

Our Score