இந்திய திரையுலகில் இதுவரை பலவிதமான படங்கள் வெளியாகி விட்டன. விலங்குகளை வைத்து தமிழில் பல படங்கள் வெளியாகியுள்ளன. இதில் நாய்களை மையப்படுத்தியும் சில தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.
இப்போது மீண்டும் ஒரு படம், தமிழ் சினிமாவில் இதுபோல் உருவாக உள்ளது. ஒரு நாயை தனித்துவமாக வைத்து இந்தப் படம் உருவாக உள்ளது. இந்தப் படத்தை ‘உறுமீன்’ படத்தின் இயக்குநரான சக்திவேல் பெருமாள்சாமி எழுதி, இயக்க உள்ளார்.
இந்தப் படத்தை காக்டைல் சினிமாஸ் மற்றும் யுனைடட் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளன. முதல்கட்டமாக படத்தின் போஸ்டர் நேற்றைக்கு வெளியாகியுள்ளது.
“இந்தப் படம் கேரளாவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளது. ஒரு நாய்க்கும் மனிதருக்கும் இடையே இருக்கும் உறவையும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளும்விதத்தை பேசவிருக்கிறது. குழந்தைகள் கவரும் விதத்தில் ஒரு அட்வென்சர் படமாகவும் இது இருக்கும்…” என்கிறார் படத்தின் இயக்குநரான சக்திவேல்.