full screen background image

காதலால் ஏற்படும் விபரீதங்களைக் காட்டும் ‘திவ்யா மீது காதல்’ படம்..!

காதலால் ஏற்படும் விபரீதங்களைக் காட்டும் ‘திவ்யா மீது காதல்’ படம்..!

பிர்லியன்ட் மூவிஸ் என்னும் புதிய நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘திவ்யா மீது காதல்’.

இந்தப் படத்தை தயாரித்து, இயக்குவதோடு இல்லாமல் கதையின் நாயகனாகவும் அறிமுகமாகிறார் மதன். நாயகியாக  நிஷா ஷெட்டி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.

பல வெற்றி படங்களை ஒளிப்பதிவு செய்த ராஜராஜன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் கதைக் களத்தை எதார்த்தமாக அமைத்துக் கொடுத்திருக்கிறார் கலை இயக்குநர் சக்திவேல். J.R.ஜோசப் இசையமைத்துள்ளார். மக்கள் தொடர்பு – செல்வரகு.

முற்றிலும் புதிய முகங்களை நடிக்க வைத்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் மதன்.

இன்றைய தமிழ்ச் சமூகத்தில் காதல் என்ற பெயரில் நடக்கும் சீரழிவு  சம்பவங்களை கதைக் களமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. காதலில் விழும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் சமூக விரோதிகளால் பாலியல் வன்கொடுமையால் சீரழிக்கப்படுகிறார்கள். இந்த ஆபத்தை உணராமல் தனிமையை தேடி செல்லும் ஒரு காதல் ஜோடிக்கு நேர்ந்த கொடுமையே  இப்படம். பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இப்படம் ஒரு பாடமாக இருக்கும்.

இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம் பெறுகிறது. இப்படத்திற்கு சென்சாரில் ‘U/A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு கடலூர் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 29 அன்று தமிழகம் முழுவதும் வெளியாகிறது.

 
Our Score