full screen background image

இயக்குநர் விஜய்-நடிகை அமலாபால் திருமணம் அறிவிப்பு..!

இயக்குநர் விஜய்-நடிகை அமலாபால் திருமணம் அறிவிப்பு..!

நடிகை அமலாபால்-இயக்குநர் விஜய் திருமண அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே இவர்களது காதலை மீடியாக்கள் கரடியாய் கத்தியபோதும் “அமலாபாலா யார் அது..?” என்ற ரீதியில் கேள்வி கேட்டு கதவைச் சாத்திக் கொண்டிருந்த இயக்குநர் விஜய் இன்றைக்கு அவராகவே முன் வந்து தான் அமலாபாலை காதலித்ததாகவும், திருமணம் செய்யவிருப்பதாகவும் சொல்கிறார்.

‘வீரசேகரன்’ என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கால் பதித்த அமலாபால் ‘தெய்வத்திருமகள்’ படத்தில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடித்தார். அப்போதிலிருந்து இருவருக்குள்ளும் காதல் தீ பற்றிக் கொண்டதாம்.

சமீபத்தில் நடந்த ‘சைவம்’ பட விழாவிற்குப் பின்பு விஜய்-அமலாபால் திருமணச் செய்தியை மீடியாக்கள் துப்பறிந்து வெளியிட்ட பின்பு அரசல்புரசலாக காதலை ஒப்புக் கொண்டு மீடியாக்களுக்கு நியூஸ் கொடுத்தார் அமலாபால்.

ஆனால் இதற்கெல்லாம் முன்பேயே இருவரின் திருமணம் இரு வீட்டாராலும் பேசி நிச்சயிக்கப்பட்டுவிட்டது என்பது அனைவரும் அறிந்ததுதான். ஜூன் 12-ம் தேதி திருமணம் என்பது 1 மாதத்திற்கு முன்பாகவே தெரிந்ததுதான்..

இப்போதைய இவர்களது அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி  ஜூன் 7-ம் தேதி கொச்சியில் அமலாபாலின் இல்லத்தில் நிச்சயத்தார்த்த விழா நடைபெறப் போகிறது.

ஜூன் 12-ம் தேதி மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் இருவரின் திருமணமும் நடைபெறும் என்று இன்றைக்குத் தெரிவித்துள்ளார்கள்.

மணமக்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்..!

Our Score