full screen background image

கேமிராவில் பதிவான பேய் சப்தம் – இயக்குநர் சுந்தர் சி.யின் பேய் அனுபவம்..!

கேமிராவில் பதிவான பேய் சப்தம் – இயக்குநர் சுந்தர் சி.யின் பேய் அனுபவம்..!

‘அரண்மனை’ திரைப்படம் அடுத்த மாதம் ரிலீஸாகப் போவதையொட்டியும், சினிமா நிருபர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து ரொம்ப வருஷமாச்சுன்றதாலும் நேற்றைக்கு பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருந்தார் இயக்குநர்-நடிகர் சுந்தர் சி.

“என்ன இப்படி திடீர்ன்னு ஹர்ரர் மூவிக்கு மாறிட்டீங்க…?” என்று கேட்டதும், “இதுதான் என்னோட கேரியர்ல முதல் திகில் படம். வீட்ல ராத்திரில லேடீஸ், பிள்ளைக எல்லாரும் பேய் படம்தான் பார்க்குறாங்க. நானும் ரொம்ப நாளா கவனிச்சேன்.. சரி.. நாம ஒரு படம் எடுத்துதான் பார்ப்போமேன்ற எண்ணத்துல ஆரம்பிச்சது இது..

என்னுடைய வழக்கமான காமெடியெல்லாம் சேர்த்து பக்கா குடும்பப் படம் மாதிரியும் எடுத்திருக்கேன். ஏன்னா இது மாதிரியான படங்களை இப்போ பேமிலியரா வந்துதான் பார்க்குறாங்க.. ஸோ.. மொத்தக் குடும்பமும் பார்க்குற மாதிரிதான் இருக்கும்..

வினய், சந்தானம், ஹன்சிகா, ஆன்ட்ரியா, லட்சுமிராய், தம்பி ராமையா  மற்றும் பலர் நடிச்சிருக்காங்க. கூட நானும் ஒரு சின்ன கேரக்டர்ல வர்றேன்.. ஹன்சிகாவுக்கு அண்ணனா நடிச்சிருக்கேன்.. முதல்ல நான் நடிக்கிற ஐடியாவே இல்லை.. அப்புறம் ஹன்சிகாவுக்கும் பொருத்தமா வெயிட்டான ஆளா போட்டாத்தான் அந்த கேரக்டர் நிக்கும்னு தெரிஞ்சது.. நானே நடிச்சிட்டேன்..

ஒரு பெரிய அரண்மனைய விக்குறதுக்காக ஒரு குடும்பம் அங்க வருது. வர்ற இடத்துல அந்த அரண்மனைல நடக்கிற மர்மமான சம்பவங்கள்தான் படத்தோட கதை. இதுல ஹன்ஸிகாதான் பேயா நடிச்சிருக்காங்க. இந்தப் படத்துக்கப்புறம் நிச்சயமா ஹன்ஸிகாவை பத்தின உங்களோட அபிப்ராயம் மாறும். அவங்களால நல்லா நடிக்கவும் முடியும்ன்றதை இந்தப் படம் நிச்சயமா ப்ரூப் பண்ணும்..

சமீப காலமா பேய் படங்கள் நல்லா ஓடியிருக்கு. இதுல ஒரு விஷயம் ஒற்றுமையா இருக்கும். அதாவது இந்த மாதிரியான பேய் படங்கள்ல ஒரு வீடுதான் முக்கிய கதாபாத்திரமா இருக்கும்.  ‘சந்திரமுகி’, ‘காஞ்சனா’ இந்த மாதிரி படங்கள்ல கூட வீடுதான் மையமா இருக்கும். அந்த வகைல இ்ந்தப் படத்துல இந்த ‘அரண்மனை’யும் ஒரு கேரக்டராத்தான் வருது.. கொஞ்சமில்லை.. நிறையவே பயமுறுத்துற மாதிரி எடுத்திருக்கோம்..

மனோபாலாவும், கோவை சரளாவும் காமெடி திரைக்கதைல பின்னியிருக்காங்க.. மனோபாலாவுக்கு தலைல அடிபட்டு 25 வருஷத்துக்கு முன்னாடி நடந்ததெல்லாம் மறந்து போயிரும். அவர் இன்னமும் பழைய ஞாபகத்துலேயே கோவை சரளாவை லவ் பண்றேன்னு கலாட்டா செய்வாரு..

சந்தானத்தோட கேரக்டரும் படத்துல பவர்புல்லானது.. ஒரு விஷயத்தைத் தேடி அந்தஅரண்மனைக்குள்ள சமையல்காரன்னு பொய் சொல்லி உள்ள நுழைவாரு.. கடைசில பேயும் அவரும்தான் பேசிக்கிட்டேயிருப்பாங்க.. படம் முழுக்க அதகளம் செஞ்சிருக்காரு..” என்றார்..

“உங்களுக்கு பேய், பிசாசு மேல நம்பிக்கையிருக்கா…?” என்று கேட்டதற்கு, “நிறைய நடிகர், நடிகைகள் தங்களது அனுபவமா நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்காங்க.. இந்தப் படத்துலகூட எனக்கு ஒரு அனுபவம் கிடைச்சது.. ஒரு காட்சில பேனிங் ஷாட் வைச்சிருந்தேன். கேமிராவை திருப்பி இருட்டான ஒரு இடத்தை போகஸ் செய்ற மாதிரி காட்சி. அதுபோலவே ஷூட் பண்ணிட்டு வந்திட்டோம்.

இப்போ இங்க வந்து எடிட்டிங்ல உக்காந்து போட்டுப் பார்த்தா, அந்த இருட்டான பகுதியை கேமிரா படம் பிடிக்கும்போது அந்த இடத்துல மட்டும் ‘உ்ஷ்’ன்னு ஒரு சவுண்டு பதிவாகியிருக்கு.. எங்களுக்கே திக்குன்னு இருந்துச்சு…” என்றார்.

பேய் படம்ன்னு சொன்னவுடனேயே, தானாகவே பேய் வந்து உக்காந்திருச்சு போலிருக்கு..!

Our Score