full screen background image

ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய படத்தை சுதா கொங்காரா இயக்குகிறார்

ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய படத்தை சுதா கொங்காரா இயக்குகிறார்

‘KGF-2’ படம் மூலமாக இந்திய அளவில் மிகப் பெரிய கவனம் ஈர்த்த  ‘ஹோம்பாலே பிலிம்ஸ்’  புரொடக்‌ஷன் நிறுவனம் தனது 14-வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்குகிறார்.

மிகத் தரமான மற்றும் பிரம்மாண்டமான படங்களை தந்து கொண்டிருக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம் ‘ஹோம்பாலே பிலிம்ஸ்’.

பிரபாஸின் ‘சலார்’ உள்பட சமீபத்தில் வெளியாகி இந்தியத் திரையுலகின் ஒட்டு மொத்தக் கவனத்தையும் ஈர்த்துள்ள  KGF-2’ படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்து ரசிகர்களிடம் சரியாக கொண்டு போய் சேர்த்த பெருமைக்குரிய நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ்’ தனது அடுத்தப் படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு அதன் எதிர்பார்ப்பை இப்பவே எகிற வைத்துள்ளது.

‘சூரரைப் போற்று’ படம் மூலமாக சர்வதேச அளவில் கவனம் பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இந்தப் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். சுதா கொங்கரா தற்போது ‘சூரரைப் போற்று’ படத்தை இந்தியில் இயக்கி வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு  முடிந்த பின் 2D entertainment சார்பாக சூர்யா தயாரித்து நடிக்கும் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். அதன் பிறகு இத்திரைப்படத்தை துவங்கவிருக்கிறார்.

 
Our Score