மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் முதன் முறையாக இளையராஜா & யுவன் சங்கர் ராஜா இசையில் இயக்குநர் சீனு ராமசாமி எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் ‘மாமனிதன்’.
வரும் ஜூன் 24-ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் தனது ஸ்டுடியோ 9 நிறுவனம் மூலம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகிறார்.
இந்த தருணத்தில் தமிழக திரைத்துறையில் முன்னோடிகளாக மக்களால் இன்றும் நினைக்கப்படும் ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர், ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன், ‘முத்தமிழ் அறிஞர்’ டாக்டர் கலைஞர் அவர்களுக்கு இயக்குநர் சீனு ராமசாமி மலர் மரியாதை செய்தார்.
இது பற்றி இயக்குநர் சீனு ராமசாமி கூறும்போது “இந்த தமிழ் சினிமாவின் மாமனிதர்கள் எனக்குள் உண்டாக்கிய கலை உணர்வுக்கு நன்றி கூறும் விதமாக என் அன்பை அவர்களின் காலடியில் மலர்களாக சமர்ப்பித்தேன்” என்றார்.