full screen background image

முருகதாஸின் பட்டறையில் இருந்து நான்காவது இயக்குநர்..!

முருகதாஸின் பட்டறையில் இருந்து நான்காவது இயக்குநர்..!

இயக்குனர் முருகதாஸின் பாசறையில் இருந்து வரும் இளம் இயக்குனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது.

‘எங்கேயும் எப்போதும்’ சரவணன், ‘மான் கராத்தே’ திருக்குமரன், ‘அரிமா நம்பி’ ஆனந்த் ஆகியோரை தொடர்ந்து வரும் புதிய இயக்குனர் ராஜு கணபதி.

மயூகா கிரியேசன்ஸ் என்னும் புதிய பட நிறுவனத்தின் சார்பில் சாய் பிரசாத் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தை ராஜூ கணபதி இயக்குகிறார். இதில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடிக்கிறார்.

“ராஜூ என்னுடன் இணை இயக்குநராக பணி புரிந்தபோது அவரது செயல் திறனை பார்த்து நான் வியந்து இருக்கிறேன். அவர் என்னுடன் நிறைய பயணம் செய்திருக்கிறார். நான் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று இயக்கிய என் எல்லா மொழி படங்களிலும் என்னுடன் பணியாற்றிய ராஜூ, தற்போது நான் துவக்கி வைக்கும் இந்தப் படத்தின் மூலம் பெரிய இயக்குனராவார் என்ற நம்பிக்கை நிச்சயம் எனக்கு உண்டு…” என்று கூறினார் குருநாதர் A.R.முருகதாஸ்.

பிரபல ஒளிப்பதிவாளர் R.D.ராஜசேகரிடம் பல படங்கள் பணியாற்றிய ஜெயப்ரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, மரகதமணி இசையமைக்கிறார். மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகை தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மாதம் இறுதியில் படப்பிடிப்பு துவங்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்திலும், சென்னையிலும் நடக்க உள்ளது.

Our Score