full screen background image

‘முண்டாசுப்பட்டி’ இயக்குநர் ராம் இயக்கும் புதிய படம்

‘முண்டாசுப்பட்டி’ இயக்குநர் ராம் இயக்கும் புதிய படம்

சென்ற வருடம் பிரபல தயாரிப்பாளர் சி.வி. குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரித்த திரைப்படம் முண்டாசுப்பட்டி.

சூப்பர்ஹிட் வெற்றி பெற்ற இந்தப் படத்தில் விஷ்ணு, ந்ந்திதா ஜோடியாக நடித்திருந்தனர். இயக்குநர்  ராம் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். வித்தியாசமான கதைக் களமும், சுவாரஸ்யமான திரைக்கதையும் ‘முண்டாசுப்பட்டி’ படத்தின் வெற்றிக்கு வழி வகுத்தது. இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்த முனீஸ்காந்த் இப்போது பல படங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து வருகிறார்.

இந்த படம் மிகப் பெரிய அளவுக்கு வெற்றி பெற்றிருந்தாலும் அதன் பின்பு இயக்குநர் ராமிற்கு உடனடியாக படங்கள் கிடைக்கவில்லை. இத்தனை நாட்கள் காத்திருந்து இப்போதுதான் மீண்டும் படத்தினை இயக்கவுள்ளார்.

மறுபடியும் தயாரிப்பாளர் சி.வி.குமாரே இவருக்குக் கை கொடுத்திருக்கிறார். தனது திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திறகாக புதிய படமொன்றை இயக்கும் பொறுப்பை ராமிடம் ஒப்படைத்திருக்கிறார் தயாரிப்பாளர் சி.வி.குமார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.

Our Score