“நீதான் டூப்பு; அவன்தான் ஹீரோ..!” – நடிகர் சத்யராஜிடம் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் சொன்னது..!

“நீதான் டூப்பு; அவன்தான் ஹீரோ..!” – நடிகர் சத்யராஜிடம் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் சொன்னது..!

‘கங்காரு’ படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் பெப்சி தொழிலாளர்களை பாராட்டும்விதமாக திருமதி பழனிச்சாமி படத்தின்போது நடந்த ஒரு சம்பவத்தை தெரிவித்தார்.

“திருமதி பழனிச்சாமி’ படத்தில் க்ளைமாக்ஸ் சண்டையை கஷ்டப்பட்டு எடுத்தோம். 70 அடி  உயரத்தில் இருந்து ஜீப் ஜம்ப் ஆகிற காட்சியெல்லாம் ஷூட் செஞ்சோம்.

அவுட்டோரில்  எடுத்ததை இங்கு வந்து போட்டுப் பார்த்தோம். அப்போது பக்கத்துல இருந்த ஹீரோ சத்யராஜ், ‘டூப் நல்லா பண்ணியிருக்காருல்ல..’ என்றார்.  நான் உடனே சொன்னேன், ‘உனக்காக நடிச்சவன் அவன். குதிச்சவன் அவன். அப்போ அவன்தான் ஒரிஜினல். நீதான் டூப். 25 லட்சம் சம்பளம் வாங்குற நீ டூப். 750 ரூபாய் சம்பளம் வாங்குற அவன்தான் ஹீரோ’ன்னு சொன்னேன்..” என்றார்.

சூப்பர்.. மறுக்க முடியாத உண்மை..!

Our Score