பில்டப்பிற்கே பில்டப் கொடுத்த இயக்குநர் பேரரசு..!

பில்டப்பிற்கே பில்டப் கொடுத்த இயக்குநர் பேரரசு..!

தமிழ்நாட்டில் உள்ள ஊர்ப் பெயர்களையெல்லாம் வைத்து படம் செய்து பெயர் எடுத்தவர் இயக்குநர் பேரரசு. பெரிய நடிகர்களெல்லாம் தங்களை பில்டப் செய்யுங்க என்று இயக்குநர்களிடம் சொல்வதற்கே கூச்சப்படும் வேளையில் ‘படத்தில் ஹீரோ நீங்க. அந்த ஹீரோவா நாங்க பில்டப் பண்றோம்’ன்னு சொல்லி அஜீத்தையும், விஜய்யையும் பில்டப் செய்ஞ்சே கவிழ்த்தவரும் பேரரசுதான்..

இந்த பில்டப் கடைசியில் எங்கே போய் முடிந்தது என்றால் பேரரசுவே ஸ்கிரீனில் ஹீரோ போல் ஆக்சனில் வந்து முடிந்தபோதுதான். அதற்குப் பின் இப்போதுவரையிலும் அவருக்குப் படமில்லை. திருப்பாச்சி,  சிவகாசியில் இவர் விஜய்யை வைத்து நடத்திய வெடி தோரணையில் விஜய்யின் ரசிகர் மன்றம் அப்படியொரு ஆட்டம் போட்டது.

நேற்று பிரசாத் லேப்பில் நடைபெற்ற காதல் பஞ்சாயத்து படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய பேரரசு இந்தப் பழைய சம்பவங்களை கொஞ்சம் அசை போட்டார்.

“முதல் படத்தில் நடிக்கும் ஹீரோக்கள் தங்களது படங்களில் ரஜினி அளவிற்கு பில்டப் பாடலை அறிமுக பாடலாக வைத்து நடிக்கிறார்கள். முதல் படத்திலேயே ரஜினி, விஜய், அஜீத் ரேஞ்சுக்கு பாடல்களை வைக்காதீர்கள் அது படம் பார்க்க வருபவர்களை எரிச்சல் ஊட்டும் கொஞ்சம், கொஞ்சம் என்று வளருங்கள். மக்கள் உங்களை ரசிக்க ஆரம்பித்தவுடன் அது மாதிரி பாடலில் நடியுங்கள். புதுமுகங்களை வைத்து இயக்கும் இயக்குனர்களிடம் இதை வேண்டு கோளாக வைக்கிறேன்.

நான் ‘திருப்பாச்சி’ படத்தை இயக்கிய போது விஜய் ஆக்சன் ஹீரோவாக பெரிய ஆளாகிவிட்ட நேரம். ‘நீ எந்த ஊரு.. நான் எந்த ஊரு’ என்ற பாடலை பதிவு செய்து போட்டு காட்டினோம். அதை கேட்ட விஜய் ‘இது சரியா வருமா? இவ்வளவு பில்டப் எடுபடுமா?’ என்று கேட்டார். அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தேன். அவ்வளவு பெரிய நடிகரே பயந்த நேரம் உண்டு. இந்தப் படத்திலும் இதன் ஹீரோ தேவன் மிக கஷ்டப்பட்டு நடிச்சிருக்கார். ஹீரோயிஸத்துடன் அறிமுகமாகியிருக்கார். நிச்சயமாக ஜெயிப்பார்…” என்றார் பேரரசு.

அன்னிக்கு ஆரம்பிச்ச அந்த ஹீரோயிஸம் இன்றுவரையிலும் விஜய் படங்களில் தொடர் கதையாகவே வந்து கொண்டிருக்கிறது.

இந்த ‘காதல் பஞ்சாயத்து’ ஹீரோ தேவனின் ஹீரோயிஸ பாடல் காட்சியை பார்க்கும் கொடுப்பினை தமிழக மக்களில் எத்தனை பேருக்குக் கிடைக்கப் போகிறதோ..?

Our Score