கடந்த வாரம் புதுமைப்பித்தனான இயக்குநர் பார்த்திபனை பற்றிய ஒரு செய்தி இணையத்தில் பரவியது.
அவருடைய இயக்கத்தில் இப்போது வரவிருக்கும் ‘கதை, திரைக்கதை, வசனம் இயக்கம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது நடிகர் விஜய் பற்றியும், அவருடைய ‘நண்பன்’ படத்தைப் பற்றியும் பார்த்திபன் அவதூறாகப் பேசியதாகச் செய்திகள் வெளிவந்தன.
அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு சென்று வந்த அத்தனை பத்திரிகையாளர்களுக்கும் இது புதிய கட்டுக்கதையாக இருந்தது. “எப்பவும் நாமதான் பில்டப்பு கொடுப்போம்.. இப்போ நமக்கேவா..” என்று அந்த இணையத்தளத்தைத் தேடினால், அது வழக்கம்போல இலங்கையில் இருந்து வெளியாகும் காப்பி பேஸ்ட் இணையத்தளம்.
ஆனாலும் பார்த்திபன் இந்த அவதூறு செய்திக்கும் மிகப் பொறுப்பாக தன்னுடைய பாணியில் இன்றைக்கு விளக்கமளித்திருக்கிறார்.
அது இங்கே :