full screen background image

“ஐயோ.. அது நான் எழுதலை…” – மறுக்கும் இயக்குநர்..!

“ஐயோ.. அது நான் எழுதலை…” – மறுக்கும் இயக்குநர்..!

பல பெரிய பத்திரிகைககள்கூட அவசரத்தில் சறுக்கிவிடும் என்பதற்கு இந்த வார ‘ஆனந்தவிகடன்’ பத்திரிகையில் வந்திருக்கும் ஒரு செய்தி உதாரணம்..!

‘ஆனந்தவிகடன்’ வாரப் பத்திரிகையில் வாராவாரம் வெளிவரும் ‘நானே கேள்வி நானே பதில்’ பக்கத்தில் இந்த வாரம் வெளிவந்திருக்கும் ஒரு ‘கேள்வி-பதில்’தான் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

அது இதுதான் :

anandhavikatan-naveen

புகைப்படத்தில் வலது பக்கம் இருக்கும் “உச்சக்கட்ட வெறுப்பில் என்ன செய்வீர்கள்?” என்ற கேள்விக்கு விகடன் அளித்துள்ள பதிலில் அது குறிப்பிட்டுள்ள இயக்குநர் ‘மூடர்கூடம்’ நவீன் இல்லையாம். அது ‘லூசியா’ படத்தின் இயக்குநர் பவன்குமார் தனது முகநூலில் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பத்தி செய்தியாம்.

அதனை ‘மூடர்கூடம்’ படத்தின் இயக்குநர் நவீன் தனது முகநூலில் எழுதியிருப்பதாக தவறுதலாக குறிப்பிட்டிருக்கிறது ‘ஆனந்தவிகடன்’ வார இதழ்.

இது குறித்து இன்று தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் நவீன்.

நவீன் தனது பதிவில், “இந்த வாரம் ‘ஆனந்த விகடனில்’ 56-ஆம் பக்கத்தில் ‘நானே கேள்வி நானே பதில்’ என்கிற பகுதியில் கரூரை சேர்ந்த கேசவன் எனும் வாசகர் இதை பதிவு செய்துள்ளார்.

உண்மையில் அது என்னுடைய ஸ்டேட்டசே இல்லை. I did not post any such status on FB or any other social networking site. முழு நேரமாக சிவீனுடன் விளையாடிக் கொண்டும், பகுதி நேரமாக script எழுதிக் கொண்டும் இருக்கும் எனக்கு முகநூலில் ஹீரோயின்கள் புகைப்படங்கள் தேடுவதற்கு கண்டிப்பாக நேரமும் இல்லை விருப்பமும் இல்லை.

நானே ஒரு தடவ என்னோட facebook accountஅ ஃபுல்லா அலசி பாத்துகிட்டேன். ஒரு வேல எனக்கு செலக்டிவ் அமினீஷியா வந்துருச்சோன்னு..”  என்று தனது விளக்கச் செய்தியில் கூறியுள்ளார் இயக்குநர் நவீன்.

நவீன்-பவன்குமாராக எப்படி மாறியது என்பதை ‘ஆனந்தவிகடன்’தான் சொல்ல வேண்டும்..!

Our Score