இந்தக் கொரோனா நெருக்கடியில் திரையுலகம் சம்பந்தப்பட்ட விழாக்களும், நிகழ்ச்சிகளும் இல்லாமல் போனதால் பல நட்சத்திரங்களும், இயக்குநர்களும் தங்களது அடுத்தக்கட்ட நகர்வைத் தெரிவிக்க தங்களது சமூக வலைத்தளங்களையே அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள்.
மீடியாக்களிடம் அதிகமாக பேச விரும்பாத இயக்குநர் மிஷ்கின்கூட டிவிட்டரில் தனது ரசிகர்களிடத்தில் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் உரையாடினார்.
அந்த நிகழ்ச்சியின்போது அநேகம் பேர் கேட்ட கேள்வி ஆண்ட்ரியா சம்பந்தப்பட்டதுதான். ஆண்ட்ரியா மிஷ்கின் தற்போது இயக்கி வரும் ‘பிசாசு-2’ படத்தில் நடித்து வருகிறார். ஆண்ட்ரியாதான் பேயாக நடிக்கிறாராம். ஆனால் படத்தில் ஒரு காட்சியில் ஆண்ட்ரியா முழு நிர்வாணமாக நடித்திருக்கிறார் என்றும், இதற்காக அவருக்கு மிகப் பெரிய அளவுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் பலவித ரூபங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதைப் பற்றி மிஷ்கினிடம் கேட்டபோது அதற்கெல்லாம் பதில் சொல்லாத மிஷ்கின், “இந்தப் படத்தில் நடித்தமைக்காக ஆண்ட்ரியாவுக்கு நிச்சயமாக தேசிய விருது உட்பட பல விருதுகள் கிடைக்கும்” என்று மட்டுமே சொல்லியிருக்கிறார்.
மேலும் விஜய்யை வைத்து தான் இயக்கவிருந்த படம் பலவித காரணங்களினால் தள்ளிப் போனாலும் “விஜய் கால்ஷீட் கிடைத்தால் ஜேம்ஸ்பாண்டு டைப்பில் ஒரு படத்தை இயக்குவேன்” என்றும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.