“கசமுசா இல்லாத கண்ணியமான படம் பூஜை..!” – இயக்குநர் ஹரி தகவல்..!

“கசமுசா இல்லாத கண்ணியமான படம் பூஜை..!” – இயக்குநர் ஹரி தகவல்..!

நேற்றைய முன்தினம் லயோலா கல்லூரியில் மாணவர்கள் மு்ன்னிலையில் விஷால், ஸ்ருதிஹாசன் நடித்த ‘பூஜை’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் பேசிய இயக்குனர் ஹரி, “நான் ரொம்ப வேகமானவன்.. என்னைப் போலவே என் படப்பிடிப்பும் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நடக்கும். இங்கே உங்களின் சுறுசுறுப்பையும், துடிப்பையும் பார்க்கும்போது எனக்கு மேலும் சக்தி கூடுவதாக உணர்கிறேன்.

நான் இதுபோல் கல்லூரி விழாக்களில் அதிகம் கலந்து கொண்டதில்லை. இந்த கல்லூரியில் சேரக்கூட நான் மிகவும் ஆசைப்பட்டேன். ஆனால் இடம் கிடைக்கவில்லை. எனவேதான் வேறு கல்லூரியில் சேர்ந்தேன். இங்கு வந்து பார்த்த பிறகு இது போல விழாக்களில் கலந்து கொள்ளும் ஆர்வம் எனக்குள் அதிகரித்துள்ளது.

விஷால் நடித்துள்ள இந்த ‘புஜை’ திரைப்படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. எல்லோரும் குடும்பத்துடன் வந்து பார்க்கும் அளவுக்கு அமைந்துள்ளது. கசமுசா எதுவும் இல்லாத கண்ணியமான படமாக வந்துள்ளது.

உங்களைப் போன்ற மாணவர்கள் திரையரங்குக்குச் சென்று படம் பார்க்க வேண்டும். திருட்டு விசிடி தென்பட்டால் தைரியமாக காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டும்…” என்றார்.

நிகழ்ச்சியில் பாடலாசிரியர் நா.முத்துக்குமார், ஒளிப்பதிவாளர் ப்ரியன், கலை இயக்குனர் கதிர் ஆகியோர் பேசினர். முன்னதாக லயோலா இஞ்ஜினியரிங் கல்லூரி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன.

Our Score