நடிகராக மாறியிருக்கும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்..!

நடிகராக மாறியிருக்கும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்..!

ஆண்டோ ஜோசப் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’..!

இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை ரிது வர்மா ஜோடியாக நடிக்க, KPY புகழ் ரக்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, நிரஞ்சனி அகத்தியன் நடிகையாக அறிமுகமாகிறார். இயக்குநர் தேசிங் பெரியசாமி படத்தை இயக்குகிறார்.

இந்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் தற்போதைய இளம் தலைமுறையிடம் இருந்து எடுக்கப்பட்ட ஒரு கதை. அதில் இளைஞர்களே அதிகம் நடிக்கவிருக்கிறார்கள். இன்றைய இளம் தலைமுறையினருக்காக அர்ப்பணிக்கப்படும் ஒரு படமும் கூட.

இந்தப் படத்தில் ஒரு முக்கியக் கேரக்டரில் நடிக்கிறார் தமிழ்ச் சினிமாவின் ஸ்டைலிஸான இயக்குநரான கெளதம் வாசுதேவ் மேனன்.

அவரின் ‘மின்னலே’ தொடங்கி, அடுத்து வரவிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ வரையிலும் அவரின் ஸ்டைலிஷான படைப்புகள் இளம் படைப்பாளிகள் அவரை பின் தொடர ஊக்கப்படுத்துகிறது.

இதுநாள்வரை கேமராவுக்கு பின்னால் இருந்து ரசிகர்களை கவர்ந்த கௌதம் வாசுதேவ் மேனன், அவரது ஸ்டைலான நடிப்பு திறனை இந்தப் படத்தின் மூலமாக ரசிகர்களுக்கு வழங்க இருக்கிறார்.

படத்தின் இயக்குநர் தேசிங் பெரியசாமி கெளதம் மேனனின் வருகை பற்றிக் கூறும்போது, “கௌதம் சார், எங்கள் படத்தில் ஒரு உற்சாகமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அவர்தான் பொருத்தமாக இருப்பார் என நினைத்து, ஒரு வருடத்திற்கும் மேலாக அவருக்கு மெசேஜ் அனுப்பி, அவரை நடிக்க கேட்டு வந்தேன்.

ஒரு கட்டத்தில் நான் நம்பிக்கை இழந்தபோது, அவர் பொதுவாக அவரை சந்திக்க அழைத்தார். நாங்கள் கதையைத் தவிர்த்து வாழ்க்கையைப் பற்றி நிறைய பேசினோம். ஆனால் கடைசியாக, அவர் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். அந்தக் கட்டத்தில் கனவு மெய்ப்பட ஆரம்பமானது. படம் இப்போது ரசிகர்களை மகிழ்விக்க தயாராக உள்ளது…” என்றார்.

 

Our Score