இயக்குநர் தேசிங்கு பெரியசாமி – இயக்குநர் அகத்தியனின் மகள் நிரஞ்சனா காதல் திருமணம்..!

இயக்குநர் தேசிங்கு பெரியசாமி – இயக்குநர் அகத்தியனின் மகள் நிரஞ்சனா காதல் திருமணம்..!

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநரான தேசிங்கு பெரியசாமி தனது காதலியான நிரஞ்சனா அகத்தியனை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். இவர்களின் திருமண நிச்சயத்தார்த்தம் சமீபத்தில் நடந்திருக்கிறது.

தேசிங்கு பெரியசாமி மணக்கவிருக்கும் நிரஞ்சனா அகத்தியன், தமிழ்த் திரையுலகத்தின் மூத்த இயக்குநரான அகத்தியனின் மூன்றாவது மகள் ஆவார்.

இவர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். அப்போதுதான் இயக்குநர் தேசிங்கு பெரியசாமியிடம் மிக நெருங்கிய பழக்கம் ஏற்பட்டு அது காதலில் முடிவடைந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே அகத்தியனின் மூத்த மகளான கனி, இயக்குநர் திருவை மணந்திருக்கிறார். இயக்குநர் திரு இதுவரையிலும் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘மிஸ்டர் சந்திரமெளலி’ ஆகிய தமிழ்ப் படங்களை இயக்கியிருக்கிறார்.

அகத்தியனின் இரண்டாவது மகளான விஜயலட்சுமி ஒரு திரைப்பட நடிகை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவரும் பெரோஸ் என்னும் இயக்குநரைத்தான் திருமணம் செய்திருக்கிறார்.

இப்போது மூன்றாவது மகளான நிரஞ்சனாவும், இப்போது இயக்குநர் தேசிங்கு பெரியசாமியை மணக்கவிருக்கிறார்..!

இதனால் இயக்குநர் அகத்தியனின் வீடு, தற்போது ஒரு கலைக் குடும்பமாக மாறிவிட்டது எனலாம்.

Our Score