நடிப்பாலும், இயக்கத்தாலும் தமிழ் ரசிகர்களை கவர வரும் ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா..!

நடிப்பாலும், இயக்கத்தாலும் தமிழ் ரசிகர்களை கவர வரும் ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா..!

‘இயக்குனர் இமயம்’ என தமிழ் ரசிகர்களாலும், தமிழ் சினிமா துறையினராலும் செல்லமாக அழைக்கப்படும் இயக்குனர் பாரதிராஜா, பல வெற்றி படங்களில் எதார்த்த்தை புகுத்தி நமக்கு அளித்திருக்கிறார்.

பின் வந்த காலங்களில் தான் சிறந்த இயக்குனர் மட்டுமல்ல, சிறந்த நடிகரும்கூட என்பதை ‘பாண்டிய நாடு’ படத்தின் மூலம் நிருபித்து காட்டினார். தற்போது இயக்குனர் இமயம் தன் நடிப்பாலும், இயக்கத்தாலும் தமிழ் ரசிகர்களை கவர உத்வேகமாகிவிட்டார்.

இப்போது மூன்று புதிய படங்களில் நடிக்கவும், ஒரு படத்தை இயக்கவும் உள்ளார் பாரதிராஜா.

மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ‘சலீம்’ படத்தை இயக்கிய என்.வி.நிர்மல்குமார் இயக்கத்தில் ‘ஒம்’ என்ற படத்திலும், மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தன் புதல்வன் மனோஜ் பாரதிராஜாவின் இயக்கத்தில் ‘சிகப்பு ரோஜாக்கள் 2’ என்ற படத்திலும், VLS ராக் சினிமா, வி. சந்திரன் தயாரிப்பில் கிஷோர் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இன்னமும் பெயர் வைக்கப்படாத ஒரு புதிய படத்திலும் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளார் பாரதிராஜா.

மேலும் பாடலாசிரியர் சிநேகனின் நடிப்பில், ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார்.

 73 வயதை தொட்டுவிட்டாலும், படைப்பாளிக்கு சோர்வில்லை என்பதை மீண்டும், மீண்டும் தனது உழைப்பின் மூலம் நிரூபிக்கிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா..!

Our Score