சென்ற மாதம் வெளிவந்த ‘வெண்நிலா வீடு’ திரைப்படம் பரவலாகப் பேசப்பட்டாலும் தியேட்டர்களில் ஓட்டப்படவில்லை. நல்ல படம்.. குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் என்ற பிரச்சாரங்கள் ரசிகர்களின் வீடுகளை எட்டும்போது படம் தியேட்டரிலிருந்து தூக்கப்பட்டுவிட்டது. இனி ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் விளம்பரங்களுக்கிடையில் இதை பார்த்து பரவசப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்..
இப்போது இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் இமயம் பாரதிராஜா படத்தைப் பார்த்து மிகவும் இம்ப்ரஸ் ஆனவர், அந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் வெற்றி மகாலிங்கத்திற்கு பாராட்டு கடிதம் எழுதியுள்ளார்.
அது இங்கே :
காலம் கடந்திருந்தாலும், சிறந்தை படைப்பை முன் வந்து வாழ்த்தியமைக்காக இயக்குநர் இமயத்திற்கு நமது நன்றிகள்..!