மோகனா மூவிஸ் நிறுவனமும், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி.’
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து படத்திற்கு படம் வித்தியாசாமன கெட்டப்புகளில் நடித்து வரும் நடிகர் அருள்நிதி, இந்தப் படத்திலும் இதுவரையிலும் ஏற்காத வித்தியாசமான ஒரு கெட்டப்பில் நடித்துள்ளார்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குநராகப் பல படங்களில் பணியாற்றிய அஜய் ஞானமுத்து எழுதி இயக்கியுள்ளார்.
மேலும் இதில் அரவின்சிங், கேபாஜெரமியா, புவன்சீனிவாசன், டி.சந்தானம், ஆர்.சங்கர், பூர்த்தி பிரவின், ராம் வைத்தீஸ்வரன், ஜி, அருண்பாண்டியன், நா. முத்துகுமர், அருண்ராஜா காமராஜ், அருண் சீனு, எம். பாஸ்கரன் ஆகிய தொழில் நுட்பக் கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.
சென்ற நூற்றாண்டில் பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை முதலான இடங்கள் எப்படி இருந்தனவோ அது போலவே தத்ரூபமாக அரங்கம் அமைத்து படமாக்கி உள்ளனர். ஆக்ஷன், த்ரில். திகில், சஸ்பென்ஸ், காமெடி என அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக இது உருவாகியிருக்கிறது. இந்த மே மாதமே திரைக்கு வர காத்திருக்கிறது.