‘தில்லுக்கு துட்டு 2’ படத்தின் டீஸர் அக்டோபர் 29-ல் வெளியாகிறது..!

‘தில்லுக்கு துட்டு 2’ படத்தின் டீஸர் அக்டோபர் 29-ல் வெளியாகிறது..!

2016-ம் ஆண்டில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம்பாலாவின் இயக்கத்தில், சந்தானம் கதாநாயகனாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘தில்லுக்கு துட்டு’.

இத்திரைப்படம் நகைச்சுவைக் கலந்த பேய் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து ‘தில்லுக்கு துட்டின்’ இரண்டாம் பாகத்தையும் துவக்கினார்கள்.

இதிலும் சந்தானம்தான் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஷிரத்தா சிவதாஸ் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஊர்வசி, கருணாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மேலும் ‘கலக்கப் போவது யாரு’ புகழ் ராமர் மற்றும் தனசேகர், கேரளாவில் ‘standup காமெடி’யில் புகழ் பெற்ற அய்யப்பா பைஜூவும் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஹாண்ட்மேட் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் N.சந்தானம்  தயாரிக்கிறார். ‘சாகா’ மூலம் புகழ் பெற்ற ஷபீர் இசையமைக்கிறார். தீபக் குமார் ஒளிப்பதிவு செய்ய, மாதவன் படத் தொகுப்பு செய்திருக்கிறார்.

படம் பற்றிப் பேசிய தயாரிப்பாளர் என்.சந்தானம், “முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம், இரண்டு மடங்கு நகைச்சுவையோடு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் நகைச்சுவை கலந்த காமெடி படமாக மட்டுமல்லாமல் ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்டுள்ளது. அந்த முக்கியமான கேரக்டரில் நடிகை ஷிரத்தா சிவதாஸ் நடித்துள்ளார். ‘தில்லுக்கு துட்டு-2’ படத்தின் டீஸர் வருகிற அக்டோபர் 29-ம் தேதி வெளியாகும்…” என்றார்.

 

Our Score