full screen background image

“தீரன் அதிகாரம் ஒன்று’ ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும்…” – ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியனின் நம்பிக்கை..!

“தீரன் அதிகாரம் ஒன்று’ ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும்…” – ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியனின் நம்பிக்கை..!

நேற்று வெளியான ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தின் டீசர், சமூக வலைத் தளங்களில் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரம் படத்தின் ஹீரோவான கார்த்தி, தனது அடுத்த படமான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

இந்தப் படத்தை தமிழில் பல தரமான திரைப்படங்களை தயாரித்து வரும் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் கார்த்தியும் ரகுல் ப்ரீத் சிங்கும் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கிறார்கள். மற்றும் அபிமன்யு சிங், போஸ் வெங்கட் ஆகியோரும் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – சத்யன் சூரியன், படத் தொகுப்பு – டி.சிவநந்தீஸ்வரன், கலை – கே.கதிர், சண்டை பயிற்சி – திலீப் சுப்புராயன், எழுத்து, இயக்கம் – வினோத். இவர் ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கியவர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் ‘ஜெய்சல்மர்’ பகுதியில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து ‘பூஜ்’ பகுதியில் தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுமாம்.

“யதார்த்தமான லோக்கேஷனாக இருப்பதால்தான் இந்தப் பகுதியில் படப்பிடிப்பு நடத்துகிறோம். எங்கள் கதைக்கு என்ன தேவையோ, அது எங்களுக்கு இங்கே சரியாக கிடைத்துள்ளது. படத்தின் முக்கியமான காட்சிகள் இங்கே படமாக்கப்பட்டு வருகிறது. ‘பூஜ்’ பகுதியில் ஆக்சன் காட்சிகளை பரபரப்பாக படமாக்கவுள்ளோம். ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனின் ஆக்சன் ஸ்டைலில் ஹை வே ஆக்சன் காட்சி ஒன்றும் ‘பூஜ்’ பகுதியில் படமாக்கப்படவுள்ளது. மொத்தம் 40 நாட்கள் இந்தப் பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது. இந்தப் படம் ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும்..” என்கிறார் படத்தின் ஒளிப்பதிவாளரான சத்யன் சூரியன்.

Our Score