வெளிநாட்டில் விருதுகளைப் பெறும் ‘தர்மதுரை’ திரைப்படம்

வெளிநாட்டில் விருதுகளைப் பெறும் ‘தர்மதுரை’ திரைப்படம்

தென்னிந்திய மொழி திரைப்படங்களுக்காக வருடந்தோறும் ஆசியா விஷன் திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டுக்கான விருது வழங்கும் விழா வரும் நவம்பர் 18-ம் தேதியன்று துபாயில் நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் தமிழ்த் திரைப்படப் பிரிவில் இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளிவந்த ‘தர்மதுரை’ திரைப்படம் 4 முக்கிய விருதுகளைப் பெறுகிறது.

சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆகிய பிரிவுகளில் ‘தர்மதுரை’ திரைப்படம் விருதுகளை பெற்றுள்ளது.

இந்த விழாவில் ‘தர்மதுரை’ படத்தின் தயாரிப்பாளர் ஸ்டூடியோ 9 சுரேஷ், இயக்குநர் சீனு ராமசாமி, நடிகர் விஜய் சேதுபதி, நடிகை தமன்னா ஆகியோர் நேரில் சென்று விருதினை பெற்றுக் கொள்ள இருக்கிறார்கள்.

மேலும் இந்த நிகழ்வில் நடிகர்கள் மோகன்லால், நிவீன் பாலி, இயக்குநர் பிரியதர்ஷன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும்  விருதுகளை பெறவுள்ளனர்.