ஸ்ரீகோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ‘கோகுலம்’ கோபாலன் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘தனுசு ராசி நேயர்களே’..!
இந்தப் படத்தில் ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்கிறார். ரெபா ஜான் மற்றும் ரியா சக்ரபோர்த்தி கதாநாயகிகளாக நடிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தை பிரபல இயக்குநரும், நடிகருமான சந்தானபாரதியின் மகனான சஞ்சய் பாரதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இது இவரது முதல் படமாகும்.
இந்த ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படம் முற்றிலும் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம். ஹரீஷ் கல்யாணின் முந்தைய திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படம்.
இந்தப் படப்பிடிப்பு நேற்று காலை எளிய சம்பிரதாய பூஜையுடன் துவங்கியது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு கொண்டனர்.
நாயகன் ஹரீஷ் கல்யாண், நாயகிகள் ரெபா ஜான், ரியா சக்ரபோத்தி, மற்றும் நடிகர்கள் அருண் விஜய், கௌதம் கார்த்திக், மஹத், விஷ்ணு விஷால், நாசர், பாண்டியராஜ், பிரித்வி பாண்டியராஜன், டேனி, ஆர்.எஸ். சிவாஜி, ரிஷிகேஷ், வருண், 5 ஸ்டார் கல்யாண், விஜய் ஆதிராஜ், முனீஷ்காந்த், நடிகைகள் ரேணுகா, காயத்ரி, சம்யுக்தா, சுபிக்ஷா, அதுல்யா ரவி, லிஸி பிரியதர்ஷன், பிந்து மாதவி, இயக்குனர்கள் பாக்யராஜ், ரஞ்சித் ஜெயக்கொடி, இளன், விருமாண்டி, இயக்குநர்கள் செல்வா, பி.வாசு, ஆதிக் ரவிச்சந்திரன், ஆர்.வி.உதயகுமார், பிரதீப், கண்ணன், சந்தானபாரதி, இசையமைப்பாளர்கள் அனிருத், ஜிப்ரான், பாடலாசிரியர் மதன் கார்க்கி, கு கார்த்திக், வசனகர்த்தா பொன் பார்த்திபன், தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், கலையரசு, பிரமோத் ஃபிலிம்ஸ் ஸ்ருதி, கலர்ஸ் அனூப், வேல்ஸ் பிலிம்ஸ் அஸ்வின் மற்றும் ரம்யா என தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் பலரும் இந்த பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினார்கள்.
தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் கேமராவை ஆன் செய்ய, இயக்குநர் பி.வாசு கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.