கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் ‘தேவ்’ திரைப்படம்

கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் ‘தேவ்’ திரைப்படம்

‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் ‘தேவ்.’

அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில், ‘சிங்கம்-2’, த்ரிஷா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘மோகினி’ ஆகிய படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது.

படத்தில் கார்த்தியுடன் ரகுல் ப்ரீத் சிங், பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், அம்ருதா, விக்னேஷ், டெம்பர் (தெலுங்கு) வில்லன் வம்சி ரவி மற்றும் சிறப்பு வேடத்தில் கார்த்திக் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இசை – ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவு – வேல்ராஜ், சண்டை இயக்கம் – அன்பறிவு, படத் தொகுப்பு – ரூபன்.

படத்தில் கார்த்தியின் ஸ்டைலிஷான லுக் மற்றும் மாஸான தோற்றம் படத்தில் புதுமையான ஒரு விஷயமாக இருக்கும்.  

முழுக்க, முழுக்க ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் S.லக்ஷ்மன் எந்தவித சமரசமுமின்றி 55 கோடி ரூபாய் பொருட்செலவில் மிகப் பிரம்மாண்டமான செலவில் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. விறுவிறுப்பான கார் சேசிங் மற்றும் பாடல் காட்சிகள் இங்கே படமாக்கப்படவுள்ளன. இதை தொடர்ந்து அதிரடி சண்டை காட்சிகள் இமாலய மலைகளிலும், மும்பை  மற்றும் ஐரோப்பாவிலும் படமாக்கப்படவுள்ளன. மேலும் அமெரிக்காவில் உள்ள மிகவும் அழகான லொகேஷன்களில் இப்படம் படமாக்கப்படவுள்ளது.

ஆக்சன், காமெடி, அட்வென்ஜர் கலந்து உருவாகும் இப்படத்தின் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்க உள்ளது.

Our Score