‘தேவ்’ திரைப்படத்தில் கபில்தேவின் ரசிகராக நடிக்கும் கார்த்தி..!

‘தேவ்’ திரைப்படத்தில் கபில்தேவின் ரசிகராக நடிக்கும் கார்த்தி..!

ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் S.லக்ஷ்மண் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘தேவ்’.

இந்தப் படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். இது இவருடைய 17-வது திரைப்படமாகும். நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.

கார்த்தியின் அப்பாவாக பிரகாஷ் ராஜூம், ரகுல் ப்ரீத் சிங்கின் அம்மாவாக ரம்யா கிருஷ்ணனும் நடிக்கின்றனர். இவர்கள் தவிர, ‘ஸ்மைல் சேட்டை’ விக்னேஷ், அம்ருதா, வம்சி மற்றும் பலரும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் ‘நவரச நாயகன்’ கார்த்திக் மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – வேல்ராஜ், இசை – ஹாரிஸ் ஜெயராஜ், எழுத்து, இயக்கம் – ரஜத் ரவிசங்கர்.

‘தேவ்’ படம் பற்றி இயக்குநர் ரஜத் ரவிசங்கர் பேசும்போது, "இந்தப் படத்தில் கார்த்தியின் ‘தேவ்’ கதாபாத்திரம் தோற்றம், காட்சியமைப்புகள் இவற்றை பார்த்த மாத்திரத்திரத்திலேயே அனைவரையும் காதலில் விழ வைக்கும்.

dev-movie-stills-3

காதல், ரொமான்ஸ் மட்டுமல்லாமல், ஒரு இளைஞன் தான் நினைப்பதை சாதிப்பதற்கு எந்த மாதிரியான சவால்களை எதிர்த்து போராடுகிறான் என்பதே கார்த்தியின் கதாபாத்திரம்.

கூடவே கார்த்தி தற்போதுள்ள இளைஞர்களுக்கு இருக்கும் சந்தோஷத்தையும் அனுபவிக்கிறார். ராமலிங்கம் என்ற தன் பெயரோடு தன்னுடைய அபிமான கிரிக்கெட் வீரரான கபில்தேவின் பெயரையும் சேர்த்து ‘தேவ் ராமலிங்கம்’ என்று தன் பெயரை மாற்றிக் கொள்கிறார். இன்னும் சுருக்கமாக ‘தேவ்’ என்றும் சொல்லிக் கொள்கிறார் கார்த்தி.

ரகுல் ப்ரீத் சிங்கிற்கு, கதாநாயகி மட்டுமே என்றில்லாமல் கார்த்திக்கிற்கு இணையான முக்கியத்துவம் கொடுக்கும் காட்சிகள் படத்தில் இருக்கின்றன. பல காட்சிகளில் தனது அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். அந்த காட்சிகளில் அனைவரின் பாராட்டையும் பெறப் போகிறார்.

இப்படத்தின் கதையை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் கூறி முடித்ததுமே என்னை கட்டியணைத்துக் கொண்டார். இப்படத்தில் என்னுடைய பங்கு நிச்சயம் பெரிதாக இருக்கும் என்றார். 5 பாடல்களைக் கொண்ட ‘தேவ்’ படம் இசைக்கு விருந்தளிக்கும்விதமாகவும் இருக்கும்.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜிடம் கதையைக் கூறியபோது உடனேயே இந்தப் படத்தில் பணியாற்ற ஒப்புக் கொண்டார். காட்சிக்கேற்ப கார்த்தியை வித்தியாசமாகவும், ரசிக்கும்படியாகவும் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வேல்ராஜுக்கு கார்த்தியுடன் இணைந்து பணியாற்றுவது இது மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

‘இப்படத்தின் முதல் தோற்றத்தைப் பார்க்கும்போதே, நாடெங்கிலும் உள்ள மூலை முடுக்கிலும் ‘தேவ்’ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்று நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தின் டீஸர், மற்றும் இசை வெளியீடு மிக விரைவில் நடைபெறவுள்ளது.." என்றார் இயக்குநர் ரஜத் ரவிசங்கர்.