‘தேவ்’ பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு BMW பைக் பரிசாக வழங்கப்பட்டது.

‘தேவ்’ பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு BMW பைக் பரிசாக வழங்கப்பட்டது.

'தேவ்' படத்திற்காக நடத்தப்பட்ட இரு சக்கர வாகனப் போட்டியில் சுமார் 8 லட்சம் மதிப்புள்ள BMW இரு சக்கர வாகனங்களைப் பரிசாக வென்று பிரபலமாகியிருக்கிறார்கள் நவீன் குமாரும், அபர்ணாவும்.

கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் காதலர் தினமான கடந்த பிப்ரவரி 14-ம் தேதியன்று வெளியான 'தேவ்' படத்தில் கார்த்தி, ஒரு BMW பைக்கை ஓட்டிக் கொண்டு வருவார்.

அதே போன்ற பைக்கை ‘தேவ்’ படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பரிசாக வழங்குவதாகச் சொல்லி அதற்காக ஒரு போட்டியை அறிவித்திருந்தார் படத்தின் தயாரிப்பாளர் லஷ்மண்.

அதன்படி சில கேள்விகள் அடங்கிய போட்டியில் - நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்திலோ அல்லது நண்பர்களோ  சிறப்பானவர்களாக இருந்தால் 8 லட்சம் மதிப்புள்ள BMW சூப்பர் பைக்கை வெல்லலாம் என்று கூறியிருந்தார்கள். இது தவிர 'தேவ்' படத்தைப் பற்றிய சில கேள்விகளுக்கு 100 வார்த்தைகளுக்கு மிகாமல் பதிலளிக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருந்தது.

இந்தப் போட்டியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் ‘தேவ்’ திரைப்படம் பற்றிய கேள்விகளுக்கு சிறப்பாக பதிலளித்த நவீன் குமார் மற்றும் அபர்ணா இருவரும் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இவர்கள் இருவருக்கும் தலா 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய BMW பைக்கை, நடிகர் கார்த்தி பரிசாக வழங்கினார்.

இந்த 'தேவ்' படத்தை புதுமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்க, பிரின்ஸ் பிக்சர்ஸ்-நிறுவனத்தின் தயாரிப்பாளரான எஸ்.லக்ஷ்மண் தயாரித்திருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், பிரகாஷ் ராஜ், ரம்யாகிருஷ்ணன், அம்ரிதா, RJ விக்னேஷ் காந்த் மற்றும் இன்னும் சில பிரபலங்களும் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.