full screen background image

அதிரடியில் மிரட்டும் நானியின் ‘தசரா’ படத்தின் டீசர்

அதிரடியில் மிரட்டும் நானியின் ‘தசரா’ படத்தின் டீசர்

ஸ்ரீலஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரித்துள்ள திரைப்படம் ‘தசரா’.

பான் இந்தியப் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, சாய் குமார், ஜரீனா வஹாப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்கம் – ஸ்ரீகாந்த் ஒதெலா, தயாரிப்பு – சுதாகர் செருகுரி, தயாரிப்பு நிறுவனம் – ஸ்ரீலஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ், ஒளிப்பதிவு – சத்யன் சூரியன் ISC, இசை – சந்தோஷ் நாராயணன், படத் தொகுப்பு – நவின் நூலி, தயாரிப்பு வடிவமைப்பாளர் – அவினாஷ் கொல்லா, நிர்வாகத் தயாரிப்பாளர் – விஜய் சாகந்தி, சண்டைப் பயிற்சி இயக்கம் – அன்பறிவு, பத்திரிகை தொடர்பு – சதீஷ்குமார் – சிவா (AIM).

உணர்வுகளை ஆழமாகப் பேசும் மண் சார்ந்த திரைப்படமானது எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும்போது அது அனைத்திந்தியர்களுக்கான படமாக மாறிவிடுகிறது. ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் உருவாகி வரும் இந்த ‘தசரா’ படமும் அதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

இந்தப் படம் நடிகர் நானியின் படம் மட்டுமல்ல; இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெலாவின் கனவுப் படைப்பும்கூட..! இருவருமாக இணைந்து ஒரு பிரம்மாண்டமான படைப்பை நமக்குத் தந்துள்ளார்கள்.

தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் குறிக்கும் தசரா திருவிழா, இந்தியா முழுவதும் மிகவும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டங்களில் ராவணன் உருவ பொம்மைகளை எரிப்பது ஒரு பகுதி. இந்த ‘தசரா’ திரைப்படமும் அதேபோல் தீமைக்கெதிரான நன்மையின் வெற்றியை சித்தரிக்கிறது.

தெலுங்கானாவின் கோதாவரிக்கானி சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள வீரலப்பள்ளி கிராமத்தில் நடக்கும் கதைதான் இந்தப் படம். சிங்கரேணி நிலக்கரிச் சுரங்கத்தில் உள்ள மக்கள் கஷ்டத்தை மறக்க மது அருந்துவது வழக்கம். அந்த மக்களின் வாழ்க்கை வண்ணமயமாக இல்லை. அங்கு வாழும் தரணியின் உலகம் மிகவும் காட்டுத்தனமானது. சில தீய சக்திகள் கிராமத்தில் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும்போது தரணியின் கோபம் பொங்கி எழுகிறது. இதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த ‘தசரா’வின் கதை.

ரத்தமும் சதையுமாக ஒரு மண் சார்ந்த வாழ்வைக் காட்டும் இந்த ‘தசரா’ படத்தின் டீசரை, இந்தியத் திரை பிரபலங்கள் எஸ்.எஸ்.ராஜமௌலி, தனுஷ், ஷாஹித் கபூர், துல்கர் சல்மான், ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் சமீபத்தில் வெளியிட்டனர்.

இந்தியாவெங்குமுள்ள அனைத்து பார்வையாளர்களையும் கவரும் வகையில் அசத்தலாக இருக்கிறது ‘தசரா’ டிரெய்லர். நிலக்கரி சுரங்கங்களில் பணிபுரியும் மக்களின் உலகத்தை, அவர்கள் பின்பற்றும் பழக்க வழக்கங்களைக் காட்டுவது என, இந்தத் ‘தசரா’ டீஸர் ஒரு புதிய அனுபவத்தை வழங்குகிறது. 

ஸ்ரீகாந்த் ஒதெலாவின் உருவாக்கம் ஒரு அறிமுக இயக்குநரைப் போல் இல்லை. காட்சி மற்றும் கதை சொல்லும் பாணி கதாநாயகன் மற்றும் எதிரிகள் பங்குபெறும் ஆக்சன் காட்சிகள் அனைத்தும் மிரட்டலாக உள்ளது. ஒவ்வொரு ஃப்ரேமும் அசத்தலாக முன்னெப்போதும் பார்த்திராத அனுபவத்தைத் தருகிறது

முதல் பிரேமில் தரணி(நானி) ஒரு பெரிய ராவணன் சிலைக்கு முன்னால் நிற்பது காட்டப்படுகிறது. நானியின் வெறித்தனத்தனமான தோற்றம், அவருடைய குணாதிசயம், பேச்சு, பாவனை, உடல்மொழி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

நானி கத்தியின் குறுக்கே விரலை வைத்து நெற்றியில் ரத்தம் பூசுவது அவரது கலக மனப்பான்மையைக் காட்டுகிறது. ஷைன் டாம் சாக்கோவும் சாய் குமாரும் நெகட்டிவ் வேடங்களில் தோன்றியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியனின் தலைசிறந்த ஒளிப்பதிவில், சிங்கரேணி நிலக்கரிச் சுரங்கத்தின் நிலத்திற்குள் நாமே நுழைந்தது போல் உள்ளது. ரகிதா ரகிதாவின் ஒலி அமைப்புடன், சந்தோஷ் நாராயணனின் துடிப்பான பின்னணி இசை காட்சிகளை வேறொரு நிலைக்கு உயர்த்துகிறது. எடிட்டர் நவின் நூலியின் டீஸர் கட் சிறப்பாக உள்ளது. S.L.V. சினிமாஸின் பிரம்மாண்டமான தயாரிப்பு நம்மை மிரளச் செய்கிறது. இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை வானளாவ உயர்த்தியுள்ளது.

இந்தத் ‘தசரா’ படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் மார்ச் 30-ம் தேதியன்று வெளியாகிறது.

Our Score