full screen background image

டார்க் – சினிமா விமர்சனம்

டார்க் – சினிமா விமர்சனம்

DARK MOVIE

CAST

Ajay Karthi (Vignesh)
Anchana Nethrun (Priya Dharshini)
Natraj Subramani (A) Natty (Balachander)
K. Bhagyaraj (Karunakaran)
VTV Ganesh
Indhumathi manikandan
Sibi Chakravarthy (Santhosh)

CREW

Genre: Psychological Horror
Writer & Director:- Kalyan K Jegan
Distributor: 5 Star Senthil
Production Company Name: MG Studios, 5 Star
Story: Ganesh K Babu
Producer: APV Maran, Ganesh K Babu
Cinematographer: Ravi Sakthi D.F.T
Editor: Kathiresh Alagesan
Music: Manu Ramesan
Art Director:- Shanmugaraja
Costume Designer: Gayathri Balasubramanian
Stunt:- Knife Naren
Sound designer:- Arunachalam sivalingam
Lyrics:- Yuga bharathi, Vivek, Ganesh K Babu
Executive producer:- Meena Arunesh
Publicity designer:- Vikranth
Sound engineer:- Muthu krishnan
PRO:- Nikil Murukan

இதுவும் ஒரு பேய் படம்தான். ஆனால் தொழில் நுட்பத்தின் மூலமாகவும், கதை சொல்லும் பாணியிலும், சிறப்பான இயக்கத்தினாலும் நம்மை மிரட்டி இருக்கிறார்கள்.

ஹீரோ அஜய் கார்த்திக் ஒரு வேலைக்காக சென்னை வருகிறார். இங்கே ஒரு நிறுவனத்தில் மூன்று மாத வேலை மட்டுமே இருக்கிறது. இதனால் வீடு தேடுகிறார். கிடைத்த பாடில்லை. கடைசியாக கே.பாக்யராஜ் வீட்டுக்கு வருகிறார்.

பாக்யராஜ் ரொம்பவும் நேர்மையாக “மேல் மாடி வீட்டில் ஏற்கனவே மூன்று கொலைகள் நடந்திருக்கின்றன. அதனால் அந்த வீட்டுக்கு யாரும் குடிவர பயப்படுகிறார்கள். மேலும் இந்த வீட்டை விற்றுவிட்டு சொந்த
ஊருக்கே போகலாம் என்றும் பார்க்கிறேன். அதற்கும் வழியில்லாமல் இருக்கிறேன் என்று சொல்லி வருத்தப்படுகிறார்.

இதைக் கேட்டு வருத்தப்படும் அஜய்.. “பரவாயில்லை.. நான் இங்கேயே இருக்கிறேன்.. என்று உடனடியாக முடிவு எடுத்து அந்த வீட்டுக்குள் குடியேறுகிறார்.

ஆனால், அதற்கு பிறகு ஒவ்வொரு நாளும் அவருக்கு அந்த வீட்டில் தன்னுடன் வேறு யாரோ சிலர் வசிப்பது போல தோன்றுகிறது. அந்த பய உணர்வு அவருக்குள் தீவிரமாக எழ மன நோயாளி என்கின்ற அளவுக்கு பாதிக்கப்படுகிறார் அஜய் கார்த்திக்.

இதன் விளைவாக ஒரு நாள் மேல் மாடிவீட்டில் பாக்யராஜ் இறந்துகிடக்க.. அருகிலேயே அஜய்யும் இறந்து கிடக்கிறார்.

இந்தக் கொலைகளை விசாரிக்க வருகிறார் துணை கமிஷனர் நட்டி நட்ராஜ். நட்டி ஸ்பாட்டுக்கு வந்து விசாரித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று எழுந்து உட்கார்ந்த அஜய்.. நட்டியை பெயர் சொல்லி அழைத்து உடனேயே இங்கிருந்து போயிரு என்று எச்சரித்துவிட்டு மீண்டும்  மயக்கமாகிறார். மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகும் நட்டி நட்ராஜ் என் பெயர் இவனுக்கு எப்படி தெரியும்?” என்கின்ற ரீதியிலும் விசாரிக்கத் துவங்குகிறார்.

இதற்கு பின்பு என்ன நடந்தது? கார்த்திக் அந்தப் பேய்களிடமிருந்து தப்பித்தாரா.. இல்லையா.. அந்த மூன்று கொலைகளும் எதனால் நடந்தன? நட்டி நட்ராஜூக்கும் அந்தக் கொலைகளுக்கும் என்ன சம்பந்தம்..? இதெல்லாம்தான் இந்தப் படத்தின் திரைக்கதை.

அறிமுக நடிகரான அஜய் கார்த்திக் சிறப்பாக நடித்திருக்கிறார். பயம் என்கின்ற அந்த உணர்வை அவர் சந்திக்கும் தருணத்திலிருந்து, பேய்களின் அட்டகாசத்தின் கடைசிவரையிலும் தன்னுடைய பயவுணர்வை வைத்தே நம்மையும் பயமுறுத்தியிருக்கிறார்.

யாரோ இருக்கிறார்கள் என்ற பயத்தின் நுழைவால் அவருக்கு ஏற்படும் மனக் குழப்பங்கள், பயம் இதெல்லாம் சேர்ந்து அஜய்யை ஒரு வித மன நலம் பிறழ்ந்தவராக ஆக்கும் காட்சிகளில் நிறையவே நடித்திருக்கிறார். இதனால் வேலையிலும் அக்கறையைக் காட்ட முடியாமல் தவிக்கும் காட்சிகளில் பாவமாகத் தெரிகிறார்.

வீட்டு ஓனராக நடித்திருக்கும் கே. பாக்யராஜ் டீஸண்ட்டான, பொறுப்பான வீட்டு உரிமையாளராக நடித்துள்ளார். அஜய்யுடன் தண்ணியடிக்க பாட்டிலுடன் வரும்போது ரசிக்க வைத்திருக்கிறார்.

கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வந்து மிரட்டும்போது அவர்களை சமாளிக்கும்விதத்திலும், பின்பு  வீடு விற்பனையாகப் போகிறது என்பதை சந்தோஷமாக சொல்லும்போதும் தனது நடிப்பால் பெரிதும் ரசிக்க வைக்கிறார் கே.பாக்யராஜ்.

எதையும் சந்தேகப்பட வேண்டும் என்ற போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் புழங்கும் வார்த்தைகளை வைத்தே ஒவ்வொருவரையும்  சந்தேகப்படுகிறார் நட்டி நட்ராஜ். இறுதியில் தன்னுடைய பெயர் அவர்களுக்கு எப்படி தெரிந்தது என்கின்ற கேள்விக்கு விடைபெறுவதற்காக அவர் எடுக்கும் முயற்சிகளால்தான் இந்தப் படம் நகர்ந்திருக்கிறது.

மேலும் இந்த படத்தில் நடித்திருக்கும் அஞ்சனா நேத்ரன், சிபி சக்கரவர்த்தி வி.டி.வி.கணேஷ் மற்றும் பலரும்கூட சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ரவி சக்தியின் ஒளிப்பதிவு திறமை இந்தப் படத்தில் முழுவதுமாக கொட்டப்பட்டு இருக்கிறது.

கொலைகள் அந்த வீட்டை பல்வேறு கோணங்களில் படம் பிடித்து எப்போதும் ஒரு பயத்துடனையே ரசிகர்களை அமர வைத்து இருக்கிறார். ஒளியை சிறியதாக்கி இருண்மையை பெரிதாக்கி அதிலும் பேய்களின் நகர்தலையும், தெரியும்வண்ணம் ஒவ்வொரு காட்சியிலும் படமாக்கியிருக்க.. உண்மையில் நமக்கு பயத்தை ஊட்டியிருக்கிறது ஒளிப்பதிவு.

மனு ரமேஷின் பின்னணி இசை இந்தப் படத்திற்கு ஒரு மிகப் பெரிய பலம் என்று சொல்லலாம். திடீரென்று வந்து முகம் காட்டிவிட்டு போகும் பேயை காண்பிக்கும் காட்சியில் அமைதியாக இருந்த நம்மை தூக்கி வாரி போடும் அளவுக்கு பின்னணி இசை அமைத்திருக்கிறார். இன்னொரு பக்கம் பின்னணி இசை தேவையில்லாத இடங்களில் எல்லாம் அமைதியை நிலைநாட்ட.. இந்த அமைதியும் நமக்கு மிகப் பெரிய பயத்தை கொடுத்திருக்கிறது.

இந்த பேய்களின் அட்டகாசத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக தொகுத்து நம்மை பயமுறுத்த வைப்பதற்கு என்றே உழைத்திருக்கும் படத் தொகுப்பாளருக்கும் நமது நமது பாராட்டுக்கள்.

இது பேய் கதை என்றாலும் ஒரு குடும்பத்தின் கதையாகவும் திசை திரும்பி  வீட்டையும், அதன் உள்ளே சுற்றி வரும் பேய்களின் சேட்டைகளுமாக படத்தின் கதை, திரைக்கதையை பெரிதும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குநர் கணேஷ்.

ஒரு வீட்டுக்குள்ளேயே சுற்றி சுற்றி வரும் கதையில் பல கதைகளை அவிழ்த்துவிட்டு கடைசியில் நாம் பார்ப்பதெல்லாம் மாயை என்பதாக நம்மை கச்சிதமாக ஏமாற்றி இருக்கிறார் இயக்குநர் கல்யாண் கே.ஜெகன்.

படத்தில் ஒரு நிமிடம்கூட திரைக்கதை மெயின் கதையைவிட்டு விலகவே இல்லை. அந்த அளவுக்கு கனகச்சிதமாக இந்தப் படத்தை உருவாக்கி பேய்களை உலாவ்விட்டு நம்மை மிரட்டி இருக்கிறார் இயக்குநர்.

பேய்ப் பட ரசிகர்களுக்கு நிச்சயமாக இந்தப் படம் பிடிக்கும்.

RATING : 3.5 / 5

Our Score