சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் ‘சீன் ஆ சீன் ஆ’ பாடலுக்கு 500 உள்ளூர் நடனக் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்ததற்காக நடன கலைஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அருண் விஸ்வா இந்த ‘மாவீரன்’ படத்தைத் தயாரிக்கிறார்.
பரத் சங்கர் இசையமைக்க, பிலோமின் ராஜ் படத் தொகுப்பாளராக பணியாற்றுகிறார். கலை இயக்கம் – குமார் கங்கப்பன் & அருண் வெஞ்சரமூடு, சண்டை இயக்கம் – யானிக் பென், ஒலி வடிவமைப்பு – சுரேன்.ஜி & அழகியகூத்தன், கூடுதல் திரைக்கதை & வசனம் – சந்துரு.ஏ, ஒலிக்கலவை – சுரேன் ஜி, ஆடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன், ஒப்பனைக் கலைஞர் – ஷைட் மாலிக், பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி’ஒன். ‘மண்டேலா’ புகழ் மடோன் அஷ்வின் எழுதி இயக்குகிறார்.
இந்தப் படத்தின் முதல் சிங்கிளான, ‘சீன் ஆ சீன் ஆ’ என்ற பாடலின் க்ளிம்ப்ஸ் காட்சிகள் நேற்றைக்கு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
30 விநாடிகளுக்கும் குறைவான இந்த க்ளிம்ப்ஸ் காட்சியில் நடிகர் சிவகார்த்திகேயனின் எனர்ஜி மற்றும் துடிப்பான நடன அசைவுகள் அனைவரின் ஆர்வத்தையும் கவர்ந்துள்ளது.
இந்தப் பாடலின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் இதில் இடம் பெற்றுள்ள அதிக எண்ணிக்கையிலான நடனக் கலைஞர்கள்தான். சென்னையைச் சேர்ந்த 500+ நடனக் கலைஞர்கள் மற்றும் 150+ குழுவினர் என கிட்டத்தட்ட 1000 பேர்வரை கலந்து கொண்டுள்ள இந்த பிரம்மாண்டமான பாடல் காட்சி நேற்று வெளியானது.
எண்ணூரில் பிரம்மாண்டமான நடனக் கலைஞர்கள் மற்றும் கூட்டத்தை உள்ளடக்கிய இந்த மாஸ் நம்பர் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. பரத் சங்கர் இசையமைத்த இந்தப் பாடலுக்கு ஷோபி நடனம் அமைத்துள்ளார்.
சென்னையில் இருந்து முக்கிய நடனக் கலைஞர்கள் மற்றும் குழுவினரைப் பயன்படுத்தியதற்காக நடனக் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களான சின்னி பிரகாஷ், பாபு, மாரி ஆகியோர் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் மடோன் அஷ்வின் மற்றும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா ஆகியோரைப் பாராட்டினார்கள்.
படத்தின் 80 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தற்போது சிவகார்த்திகேயன், மிஷ்கின் மற்றும் சுனில் பங்கேற்கும் சண்டை காட்சியை படக் குழுவினர் படமாக்கி வருகின்றனர்.