full screen background image

ஹாலிவுட் படத்தை இயக்குகிறார் நடன இயக்குநர் சுஜா ரகுராம்

ஹாலிவுட் படத்தை இயக்குகிறார் நடன இயக்குநர் சுஜா ரகுராம்

பிரபல நடன  இயக்குநர் ரகுராமின் பேரக் குழந்தைகள் நடிகர்களாக அறிமுகமாகும் படத்தை அவர்களின் தாயாரும், நடிகையும், நடன இயக்குநருமான சுஜா ரகுராம் மனோஜ் இயக்குகிறார்.

பிரபல நடன இயக்குநர் தம்பதிகளான ரகுராம் மற்றும் கிரிஜா ரகுராமின் மகள் சுஜா ரகுராம் மனோஜ், இவர் தனது தந்தையிடம் நடனம் மற்றும் இயக்குநர் பயிற்சி பெற்றார். பல்வேறு இந்திய மொழிப் படங்களிலும் இவர் நடித்துள்ளார். கமல்ஹாசன், பிரபுதேவா, கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர் மற்றும் பல்வேறு பிரபல இயக்குநர்களுடன் திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார்.

தொழிலதிபர் மனோஜ் வேணுகோபாலை மணந்த பின்னர் அமெரிக்காவுக்கு சென்ற சுஜா, அங்கு ஹாலிவுட் இயக்குநர்களான பென் & ஜூடி லெவின், பாயு பென்னட் மற்றும் டேனியல் லிர் ஆகியோருடன் பணிபுரிந்துள்ளார்.

தற்போது இவர், தனது பிள்ளைகளான திரிஷுல் ஆர் மனோஜ் மற்றும் சனா மனோஜ் இருவரையும், தான் தயாரித்து இயக்க உள்ள படத்தில் நடிகர்களாக அறிமுகப்படுத்த உள்ளார்.

இசையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ள இத்திரைப்படத்திற்கு டேக் இட் ஈசி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார் சுஜா.

நட்பைப் பற்றிப் பேசும் இத்திரைப்படத்தில், சாம் சி.எஸ். இசையமைத்து பென்னி தயாள் மற்றும் சனா மனோஜ் பாடியுள்ள ஒரு சிறப்பு பாடல் இடம் பெறுகிறது.

திரிஷுல் ஆர் மனோஜ், சனா மனோஜ் மற்றும் நிகில் மகேஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இவர்கள் திரைப்படத்துறையில் நுழைவதன் மூலம், தமிழ்த் திரைப்படத் துறையின் மிக மூத்த இயக்குநரான கே.சுப்பிரமணியம் அவர்களின் புகழ்மிக்க பாரம்பரியத்தை அவரது கொள்ளு பேரக் குழந்தைகள் தொடர்கிறார்கள்.

Our Score