ஒரு பக்கம் தயாரிப்புச் செலவுகள் அதிகமாகிவிட்டது. குறைக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுகிறார்கள். நடிகர், நடிகைகள் சம்பளம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தயாரிப்பாளருக்கு அதிக செலவு வைக்காமல் நடிகர், நடிகையர் ஒத்துழைக்க வேண்டும் என்று கிடைத்த மைக்குகளிலெல்லாம் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்..
செலவு என்பதில் வெட்டிச் செலவு என்பதும் உண்டு. ஷூட்டிங்கின்போது நடிகர், நடிகையருக்கு வேண்டிய அளவு வசதிகளை செய்து கொடுப்பதில் தவறில்லை. ஆனால் தேவையில்லாத இடத்தில் செலவு செய்தால்..?
இன்று காலை சத்யம் தியேட்டரில் ‘டமால் டுமீல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் கதாநாயகி ரம்யா நம்பீசனும், பின்னணிப் பாடகி உஷா உதுப்பூம் கலந்து கொண்டனர். அழையா விருந்தாளியாக ஒரு கேரவன் வேன். இது ஹீரோயினுக்காம்..! மேடையில் ஆடுவது போலவே, பாடுவது போலவோ அல்லது உடை மாற்றும் அவசியமோ ஹீரோயினுக்கு இல்லை.. பின்பு எதற்கு இந்த கேரவன் வசதி..?
தியேட்டரின் உள்ளே வந்தால் குளிரும்வகையிலான ஏசி. இருக்கப் போவதோ 2 மணி நேரம். இதற்காக கேரவன் வேனை வாடகைக்கு எடுத்து சில ஆயிரங்கள் செலவு எனில் இது வெட்டிச் செலவுதானே.. ?ஹீரோயின் கேட்டாரா.. அல்லது கேட்காமல் தயாரிப்பாளர்களே மனமுவந்து செய்தார்களா என்று தெரியாது..
ஆனாலும் வெட்டிச் செலவு.. வெட்டிச் செலவுதான்..!