full screen background image

கவின்-அபர்ணா தாஸ் நடிக்கும் ‘டாடா’ படம் பிப்ரவரி 10-ம் தேதி வெளியாகிறது

கவின்-அபர்ணா தாஸ் நடிக்கும் ‘டாடா’ படம் பிப்ரவரி 10-ம் தேதி வெளியாகிறது

ஒலிம்பியா மூவிஸ் எஸ்.அம்பேத் குமார் வழங்கும் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் – அபர்ணா தாஸ் நடிக்கும் ‘டாடா’ திரைப்படம், உலகம் முழுவதும் திரையரங்குகளில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி வெளியாகிறது.

இந்த ’டாடா’ படத்தினை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளர் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்க, கணேஷ் கே.பாபு படத்தினை இயக்கி உள்ளார்.

கவின் மற்றும் அபர்ணாதாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே.ஃபெளஸி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – எழில் அரசு.கே., ஜென் மார்ட்டின், படத் தொகுப்பு – கதிரேஷ் அழகேசன், கலை இயக்கம் – சண்முகராஜா, நடன இயக்கம் – சாண்டி, சண்டைப் பயிற்சி இயக்கம் – நைஃப் நரேன், ஒலி வடிவமைப்பு – அருணாச்சலம் சிவலிங்கம், ஆடை வடிவமைப்பு – சுகிர்தா பாலன், நிர்வாகத் தயாரிப்பு – A.P.V.மாறன், பத்திரிகை தொடர்பு  சுரேஷ் சந்திரா, ரேகா., D’One

ஒரு படத்தின் வெற்றி இளைஞர்களின் நாடித் துடிப்பைக் கொண்டுதான் நிர்ணயம் ஆகிறது என்றால் அதை இந்த ‘டாடா’ திரைப்படம் மிகச் சரியாக செய்துள்ளது.

இந்தப் படத்தின் முதல் பார்வையில் இருந்து, அற்புதமான நடிகர்கள் தேர்வு, ட்ரெண்டியான பாடல்கள் ஆகியவை பார்வையாளர்களிடையே குறிப்பாக இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இளைஞர்களுக்குப் பிடித்தமான கவின், அபர்ணா தாஸ் இருவரும் படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருப்பதால் இந்தப் படம், இளைஞர்களின் முதல் தேர்வாக இருப்பதில் ஆச்சரியமில்லை.

ஒரு படத்தின் வெற்றிக்கு பாடல்களும் முக்கிய காரணம் எனும்போது ‘டாடா’ படத்தின் பாடல்களும், இசையும் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது. இதன் முதல் பாடலான ‘டாடா பாடல்’, ‘நம்ம தமிழ் ஃபோக்’ சமீபத்தில் வெளியான ’கிருட்டு கிருட்டு’ ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இசை மற்றும் சாண்டியின் எனர்ஜியான நடனம் என இந்த அணியின் புதுமையான கான்செப்ட் படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் கூட்டி இருக்கிறது.

இந்த ‘டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிப்ரவரி 10-ல் வெளியாகிறது என்பதை படக் குழு தற்போது உறுதி செய்துள்ளது.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்தப் படத்தை வெளியிடுவதன் மூலம் ‘டாடா’ படத்திற்கு வர்த்தக வட்டாரத்திலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Our Score