full screen background image

நாக சைதன்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கஸ்டடி’ படத்தின் டீஸர் வெளியானது

நாக சைதன்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கஸ்டடி’ படத்தின் டீஸர் வெளியானது

இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிகர் நாக சைதன்யாவின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என பைலிங்குவலாக வெளியாக இருக்கும் ‘கஸ்டடி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, பிரியாமணி, சரத் குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி அமரன், வெண்ணேலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, இயக்கம் – வெங்கட் பிரபு, தயாரிப்பு – ஸ்ரீனிவாசா சித்தூரி, பேனர்- ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், வழங்குபவர்- பவன் குமார், இசை – மேஸ்ட்ரோ இளையராஜா, லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு – எஸ்.ஆர்.கதிர், படத் தொகுப்பு – வெங்கட் ராஜன், தமிழ் வசனம் – வெங்கட் பிரபு, தயாரிப்பு வடிவமைப்பு – ராஜீவன், சண்டை இயக்கம் – ஸ்டண்ட் சிவா, மகேஷ் மேத்யூ, கலை இயக்கம் – டி.ஒய்.சத்யநாராயணா, பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி’ஒன்.

தமிழ்த் திரையுலகில் தனக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ள நடிகர் நாக சைதன்யா, தமிழில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கஸ்டடி’ படம் மூலம் அறிமுகமாகிறார்.

நாக சைதன்யாவின் சினிமா பயணத்தில் அதிக அளவிலான பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய திரையுலகில் மிகவும் அதிக எதிர்ப்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கக் கூடிய திரைப்படமாக இது அமைந்திருக்கிறது.

இந்தக் ‘கஸ்டடி’ படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அதை பார்த்தாக வேண்டும் என்ற பட்டியலில் ரசிகர்கள் இதை வைத்துள்ளனர். இயக்குநர் வெங்கட் பிரபு பல்வேறு ஜானர்களில் இதற்கு முன்பு வெற்றிப் படத்தைக் கொடுத்திருக்கிறார். இந்த முறை ‘ஆக்‌ஷன் எண்டர்டெயினர்’ என்ற ஜானரில் தன் ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளார்.

படத்தின் டேக் லைனாக அமைந்துள்ள ‘A Venkat Prabhu Hunt’, இயக்குநர் வெங்கட் பிரபுவின் ரசிகர்களிடையேயும் படம் பற்றிய ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

நாக சைதன்யா தனது ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும்விதமாக இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் தனது சொந்த குரலில் டப்பிங் கொடுத்துள்ளார். ஆக்‌ஷன் பேக்ட் படமாக உருவாகி இருக்கும் இதன் டீசரிலும் இவரது குரல்தான் ஒலிக்கிறது.

நாக சைதன்யா, அரவிந்த் சுவாமி மற்றும் சரத்குமாருக்கும் இடையிலான கேட் அண்ட் மவுஸ் கேம் பற்றிய விஷயங்கள் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தன்னுடைய ஸ்டைலிஷான நடிப்பால் ரசிகர்களை கவரக் கூடிய நடிகர் அரவிந்த் சுவாமி இந்தப் படத்திலும் தன் ரசிகர்கள் விரும்பக் கூடிய சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார்.

இந்த ’கஸ்டடி’ படத்தில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அப்பா-மகன் இருவரும் ஒரே படத்தில் இசைக்காக இணைந்திருக்கிறார்கள். இசைஞானி இளையராஜா மற்றும் யங் மாஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்காக இசையமைத்து இருக்கிறார்கள். இந்தப் படத்தின் பின்னணி இசை தரக் கூடிய அனுபவத்தைத் திரையரங்குகளில் தவறவிடாதீர்கள்.  

இந்த ‘கஸ்டடி’ திரைப்படம் உலகம் முழுவதும் வரும் மே 12-ம் தேதியன்று திரையரங்குகளில் தமிழ் & தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

Our Score