full screen background image

கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயிலை ஆச்சரியப்படுத்திய ஏ.பி.ஸ்ரீதரின் க்ளிக் ஆர்ட் மியூஸியம்..!

கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயிலை ஆச்சரியப்படுத்திய ஏ.பி.ஸ்ரீதரின் க்ளிக் ஆர்ட் மியூஸியம்..!

இந்திய ஓவியர்களில் வித்தியாசமானவராக பெயர் எடுத்திருக்கும் ஏ.பி.ஸ்ரீதர், ‘க்ளிக்  ஆர்ட்  மியூசியத்தை’  சென்னையில்  உள்ள  வி.ஜி.பி. தங்கக் கடற்கரையில்தான்  முதலில் தொடங்கினார். 

ரசிகர்களை  பெரிதும்  கவர்ந்த  இந்த ‘க்ளிக்  ஆர்ட்  மியூசியம்’,  சென்னையில் கிடைத்த பெரும் வரவேற்புக்கு பின்பு அமெரிக்காவில்  கலிபோர்னியாவிலும் திறக்கப்பட்டது.  அங்கும்  பெரிய  வரவேற்பைப்  பெற்றதையடுத்து மூன்றாவதாக இப்போது  பெங்களூருவில்  ‘க்ளிக் ஆர்ட் மியூசியம்’ தொடங்கப்பட்டுள்ளது.

பெங்களூரு மக்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் வகையில் பெங்களூரு நகரத்தின் வொய்ட் ஃபீல்டில் இருக்கும் வெர்ஜினியா  மால்ஸில்,  ஏ.பி.ஸ்ரீதரின்  ‘க்ளிக்  ஆர்ட்  மியூசியம்’  புதிதாக  திறக்கப்பட்டுள்ளது.

chirish gail-2

பெங்களூரு  ‘க்ளிக்  ஆர்ட்  மியூசிய’த்தை  பிரபல  மேற்கிந்திய  தீவுகள் கிரிக்கெட் அணியின் வீரரும்,  ஐ.பி.எல்.  பெங்களூர்  அணி வீரருமான  கிறிஸ்  கெய்ல் வண்ணம்  தீட்டி  துவக்கி  வைத்தார். 

அதுமட்டுமல்லாமல், ‘க்ளிக்  ஆர்ட் மியூசிய’த்தில்  உள்ள  ஓவியங்களுடன்  மிகவும் சந்தோஷமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

chirish gail-3

‘க்ளிக்  ஆர்ட்  மியூசியம்’ அனுபவம் பற்றி கிறிஸ் கெயில் பேசுகையில், “ஏ.பி.ஸ்ரீதரின் ஓவியங்கள் எனக்கு ரொம்ப, ரொம்ப பிடித்திருக்கிறது. சிறகுகள்  ஓவியத்தின்  முன்  நின்று  புகைப்படம்  எடுத்தபோது,  நான்  ஒரு ஏஞ்சல்  போலவே  என்னை  உணர்ந்தேன்..”  என்று  சிலாகித்தார்.

chirish gail-4

“இங்கே  இருக்கிற  27  ஓவியங்களும்  மிகவும்  கவனமாக  தேர்ந்தேடுக்கப்பட்டு புதிதாக  வரையப்பட்ட ஓவியங்களாகும்.  அதனால்  உறுதியாக  ரசிகர்களை  மகிழ்விப்பதோடு,  ஒரு  புதிய  அனுபவத்தையும் நிச்சயம்  தரும்…” என்கிறார், ஓவியர் ஏ.வி.ஸ்ரீதர்.

 

Our Score