இந்திய இசை உலகில் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக, “Countries Apart, One Beating Heart” இந்த வாரம் இந்தியாவின் முன்னணி யூடியூப் சேனல்களில் ஒன்றான AP International-இல் வெளியாகிறது.
முழுமையாக கிராஃபிஷியல் இன்டலிஜென்ஸ் (AI) மூலம் உருவாக்கப்பட்ட இந்த பாடல், ஒற்றுமை, கலாச்சாரம் மற்றும் தொழில் நுட்பத்தின் கலவையாகும்.
இந்த பாடலை சிறப்பாக்கும் அம்சங்கள்:
• உலகின் 7 அதிசயங்களை (7 Wonders of the World) காட்சிப்படுத்தல்
• 7 வெவ்வேறு மொழிகளில் பாடல் வெளிப்பாடு
• பல்வேறு AI உருவாக்கிய பாடகர்களின் குரல்கள்
• பாடல் வரிகள், இசை, குரல்கள் அனைத்தும் AI மூலம் உருவாக்கப்பட்டது
இந்த மாபெரும் முயற்சியின் முழுமையான செயல்பாட்டையும் காமன் மேன் சதீஷ் மேற்கொண்டுள்ளார்.
“இது தொழில்நுட்பமும் படைப்பாற்றலும் சேர்ந்து எதை சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் ஒரு முயற்சி. நாடுகள் வெவ்வேறு இருந்தாலும் இதயத் துடிப்பு ஒன்றே என்பதைக் காட்ட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். AI அதை ஒரு புதிய வகையில் சாத்தியமாக்கியது,” என்கிறார் Common Man Sathish.
7 அதிசயங்கள், பல மொழிகளில் இசைக்குரல், மனதை தொடும் மெட்டுகள் — இவை அனைத்தும் இணைந்து உருவாகிய இந்த பாடல், இந்தியாவை உலக அரங்கில் பெருமைப்படுத்தும்.
AP International YouTube சேனல் மூலம் வெளியாகவுள்ள இந்த பாடல், கோடிக்கணக்கான ரசிகர்களிடம் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவின் AI சார்ந்த படைப்பாற்றலுக்கு ஒரு பெருமை சேர்க்கும் தருணமாகும்.
காமன் மேன் சதீஷ் பற்றி :
சதீஷ்குமார், காமன் மேன் சதீஷ் என்று அழைக்கப்படுபவர், திரைப்பட விமர்சகர், வணிக பகுப்பாய்வாளர் மற்றும் CMM நிறுவனத்தின் தலைவர். தொழில்நுட்பம் மற்றும் கலை உலகத்தை ஒன்றிணைத்து புதுமையான முயற்சிகளை மேற்கொள்வதில் அவருக்கு சிறப்பான ஆர்வம் உள்ளது.