Evolution entertainment நிறுவனம் Blueberry studios உடன் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘காட்டேஜ்’.
இப்படத்தில் விஜய் டிவி புகழ் K.P.Y.நவீன் முரளிதர் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக ஆரியா செல்வராஜ் நடிக்கிறார். கஜராஜ், தர்மா, விக்னேஷ் ராமமூர்த்தி, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தயாரிப்பு நிறுவனம் – Evolution entertainment, இணை தயாரிப்பு : Blueberry studios, எழுத்து & இயக்கம் – சதீஷ் கீதாகுமார் & நந்தினி விஸ்வநாதன், ஒளிப்பதிவு, படத் தொகுப்பு – சதீஷ் கீதாகுமார், இசை – செந்தமிழ், பாடல்கள் – கு.கார்த்திக், சண்டை இயக்கம் – டேன்ஜர் மணி, கலை இயக்கம் – தினேஷ் மோகன், உடைகள் – அக்ஷியா & விஷ்மியா, பத்திரிகை தொடர்பு – சதீஷ்(AIM).
ஒரு காட்டேஜ், ஒரு தம்பதி, அவர்களை அமானுஷ்யமாக பின் தொடரும் ஒரு மனிதன் அப்போது நடக்கும் கொலை, அதை யார் செய்தது என்பதை இருக்கை நுனியில் பரபரப்பாகச் சொல்லும் மர்டர் மிஸ்டரி திரில்லர்தான் இந்த ‘காட்டேஜ்’ திரைப்படம்.
முழுக்க முழுக்க ஊட்டியின் பின்னணியில், நடக்கும் இப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பையும் ஊட்டியிலேயே 25 நாட்களில் நடத்தி முடித்துள்ளது படக் குழு.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மூலம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இப்படம், விரைவில் திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.