கொரோனா தொற்றால் நாடே முடங்கிக் கிடக்கும் நிலையில், படப்பிடிப்புகளும் முடங்கிப் போயுள்ளதால் வேலையின்றி தவிக்கும் நாடக மற்றும் திரைப்பட நடிகர் நடிகைகளுக்கு உதவி செய்யுமாறு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தனி அதிகாரியிடம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் பலர் வேண்டுகோள் வைத்தனர்.
அதையேற்று தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, பல்வேறு தரப்பிலிருந்தும் நிதி உதவிகளையும் பொருள் உதவிகளையும் அளித்து வருகிறார்கள்.
இது குறித்து நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில்...
"கொரோனா தொற்றால் நாடே முடங்கிக் கிடக்கும் வேளையில் நாடக மற்றும் திரைப்பட நடிகர் நடிகைகளுக்கு உதவுமாறு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தனி அதிகாரியிடம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் பலர் வேண்டுகோள் வைத்தனர்.
அதன்படி, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள திரைப்பட நல வாரிய அமைப்பு உறுப்பினர்கள் அனைவருக்கும் தலா 1000 ரூபாய் உதவி வழங்கிட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
அதை தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, பல்வேறு தரப்பிலிருந்தும் நிதி உதவிகளையும் பொருள் உதவிகளையும் அளித்து வருகிறார்கள்.
நடிகர் ராகவா லாரன்ஸ் ரூபாய்-25 லட்சம் நிதி உதவி வழங்கி சிறப்பு செய்துள்ளார். இந்த பெரும் உதவி. பல பேருக்கு பயனுள்ளதாக இருக்கும். அவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெறிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இதுவரை,
ஐசரி கணேஷ் – ரூபாய் 10 லட்சம்,
கார்த்தி - ரூபாய் 2 லட்சம் விவேக் - ரூபாய் 3.50 லட்சம், சூரி - ரூபாய் 1 லட்சம் M. சசிகுமார் – ரூபாய் 1 லட்சம், SJ. சூர்யா - ரூபாய் 50,000,
நாசர் - ரூபாய் 50,000, பொன்வண்ணன் - ரூபாய் 25,000,
ஆதி - ரூபாய் 25,000, JC ஜூவல்லர்ஸ் லிமிடெட் - ரூபாய் 20,000,
வெண்ணிற ஆடை மூர்த்தி - ரூபாய் 20,000
குட்டி பத்மினி - ரூபாய் 15,000, பசுபதி - ரூபாய் 15,000, சங்கீதா - ரூபாய் 15,000, பூச்சி முருகன் – ரூபாய் 10,000, சத்யப்ரியா - ரூபாய்10,000, சேலம் பார்த்திபன் - ரூபாய் 10,000,
கோவை சரளா - ரூபாய் 10,000, ரோகிணி - ரூபாய் 10,000, லதா சேதுபதி - ரூபாய் 10,000, நாகி நீடு - ரூபாய் 10,000, சச்சு(எ) சரஸ்வதி – 10,000, பிரபா ரமேஷ் - ரூபாய் 10,000, R.K.சுரேஷ் - ரூபாய் 10,000, அழகு.K - ருபாய் 10,000, கருணாஸ் - ரூபாய் 10,000,
சாரதா - ருபாய் 10,000,
ரித்விகா(எ)மாலதி - ரூபாய் 5,000, சந்தான பாரதி - ருபாய் 5,000, சந்தோஷ் பிரசன்னா- ரூபாய் 2,000, S.செல்வா- ரூபாய் 1,000, பிளாக் பாண்டி- ரூபாய் 100.
என்று பலரும் தங்களாலான நிதி உதவியை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு அளித்துள்ளனர்.
மேலும், பல நடிகர் நடிகைகள் தமிழ் நாடு முழுக்க உள்ள நாடக நடிகர் நடிகைகள் வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்கள் கொடுத்து உதவி வருகின்றனர். அவர்களுக்கும் எங்களது நன்றி.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் கரம் நீட்டி உதவி அளித்த இவர்கள் அனைவருக்கும் அனைத்து நடிகர், நடிகையர் சமூகம் சார்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் M.நாசர் மற்றும் நிர்வாகிகள் இதன் மூலம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
பொதுவாக இந்த மூன்று மாதங்கள்தான் நாடகங்கள் அதிகம் நடத்தப்படும். நாடக நடிகர்கள் இந்த வருமானத்தை வைத்துதான் வருடம் முழுவதும் வாழ்க்கையை நடத்துவார்கள். அவர்களின் வாழ்வாதரம் இப்பொழுது கேள்விக்குறியாக உள்ளது. இவர்களில் வயதானவர்கள் அதிகம். அவர்களுக்கு அன்றாடம் பொருளுதவி தவிர மருந்து மாத்திரைகளும் தேவைப்படுகிறது.
நாடகம் மற்றும் சினிமா படப்பிடிப்புள் துவங்க இன்னும் எத்தனை மாதங்கள் ஆகும் என்று தெரியவில்லை. அதற்கு நிதி உதவி அதிகம் தேவைப்படுகிறது. ஆகவே, அனைவரும் தம்மால் இயன்ற உதவியை நடிகர் சங்கத்தின் மூலம் அளிக்க வேண்டுகிறோம்..." என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.