full screen background image

‘பிரேக்கிங் நியூஸ்’ படத்திற்காக 1 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சரக்கு விமானம்

‘பிரேக்கிங் நியூஸ்’ படத்திற்காக 1 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சரக்கு விமானம்

நடிகர் ஜெய் நடிக்கும் பிரேக்கிங் நியூஸ்’ படத்திற்காக, 1 கோடி ரூபாய் மதிப்பிலான கார்கோ விமான செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஜெய் நடிப்பில், இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில், தயாரிப்பாளர்கள் K.திருக்கடல், K.உதயம் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘பிரேக்கிங் நியூஸ்.’

இத்திரைப்படத்தில் பானு ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், பிக்பாஸ்’ சினேகன், ராகுல் தேவ், தேவ் கில், ஜெயபிரகாஷ், சந்தான பாரதி, பழ.கருப்பையா, மோகன்ராம், தேனப்பன், பேபி மானஸ்வி மற்றும் பலர் இணைந்து நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ஜானி லால் / செவிலோ ராஜா D.F.Tech, படத் தொகுப்பு – ஆண்டனி, இசை – விஷால் பீட்டர், கலை இயக்கம் –  N.M.மகேஷ், Vfx மேற்பார்வையாளர் – பிரபாகர், சண்டை பயிற்சி இயக்கம் – ஸ்டன்னர் சாம், நடன பயிற்சி இயக்கம் – ராதிகார், எழுத்து, இயக்கம் – ஆண்ட்ரூ பாண்டியன்.

இந்தப் படத்தில் இடம் பெறும் முக்கியமான சண்டை காட்சிக்காக 1 கோடி ரூபாய் செலவில் கார்கோ விமான செட் ஒன்று போடப்பட்டுள்ளது.

இது குறித்து இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் பேசும்போது, “சரக்கு விமானத்தில் காட்சி நடைபெறுவதாக  திட்டமிட்டிருந்ததால், சண்டைக் காட்சிகளைப் படமாக்குவது மிக சவாலாக இருந்தது.

இதனாலேயே தனியாக செட் போட்டு அந்தக் காட்சிகளைப் படமாக்க நினைத்தோம். தயாரிப்பாளர் செலவைப் பற்றிக் கவலைப்படாமல் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் செலவில் கலை இயக்குநரின் அர்ப்பணிப்பான திறமையால் உண்மையான சரக்கு விமானம் போன்றே செட் அமைத்துக் கொடுத்தார்.

இந்த செட்டில்தான் ஜெய் மிக அர்ப்பணிப்புடன் அவருடைய  ஆக்சன் காட்சிகளை, டூப் பயன்படுத்தாமல் தானே ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்தார். படப்பிடிப்பு முழுவதும் ஜெய் மிகவும் உற்சாகத்துடனும், சுறுசுறுப்பாகவும் இருந்து ஒத்துழைத்ததால், காட்சிகளை மிக விரைவாக, எளிதாக படமாக்க முடிந்தது..” என்றார்.

Our Score