full screen background image

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஓவியா பங்கேற்கும் ‘டான்ஸ் Vs. டான்ஸ்’..!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஓவியா பங்கேற்கும் ‘டான்ஸ் Vs. டான்ஸ்’..!

2018 பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட கலர்ஸ் தமிழ் சேனல், இந்தியாவின் மிகப் பெரிய தொலைக்காட்சி குழுமமான Viacom18  குடும்பத்திலிருந்து  வெளிவந்திருக்கும்  குடும்பப் பொழுது போக்கு சேனலாகும். 

தனித்துவமான,  வலுவான  கதையம்சம்  கொண்ட  நிகழ்ச்சிகளின்  மூலம்  உலகெங்கும் வாழ்கிற  தமிழ்  பேசும்  பார்வையாளர்களை  மகிழ்விப்பதே இந்த  சேனலின்  நோக்கமாகும். 

‘இது நம்ம ஊரு கலரு’ என்கிற அடையாளத்துடன் களமிறங்கியிருக்கிற ‘கலர்ஸ் தமிழ் சேனல்’, தமிழ்நாட்டு கலாச்சாரத்தை  அடைப்படையாகக்  கொண்ட தரமான, புதுமையான நிகழ்ச்சிகளை துவக்கத்தில் இருந்தே வழங்கி வருகிறது.

‘பேரழகி’, ‘சிவகாமி’, ‘திருமணம்’, ‘ஓவியா’, ’நம்ம ஊரு கலரு’  போன்றவை இந்த  சேனலில் ஒளிபரப்பப்பாகும்  சில  முக்கிய  நிகழ்ச்சிகளாகும்.  இன்னும்  பல  ஆர்வமூட்டும் நிகழ்ச்சிகளும்  தொலைக்காட்சி இரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றன.

காண்போரை கவர்ந்திழுக்கும் கலர்ஸ்  தமிழ்  தொலைக்காட்சியில்  இப்போது முதன்முறையாக  ‘டான்ஸ்  ரியாலிட்டி’  நிகழ்ச்சியும் அறிமுகமாகிறது.

Oviya in DVD 3

இந்த நிகழ்ச்சியின்  நடுவராக பிரபல தமிழ் நடிகர் நகுல் பங்கேற்கவுள்ளார். அவருடன் தேசிய அளவில் புகழ் பெற்ற  நடன  இயக்குநரான  பிருந்தா  மாஸ்டர்  மற்றும் செலிபிரிட்டி நடுவராக குறும்பும்,  உற்சாகமும்  கலந்த  திரைப்பட  நட்சத்திரம்  ஓவியா ஆகியோரும்  இந்நிகழ்ச்சியில்  இணைகின்றனர். 

வரும் நவம்பர் 24-ம்  தேதி  முதல் வாரந்தோறும் சனி  மற்றும்  ஞாயிறு  இரவுகளில் 8 மணிக்கு  ஒளிபரப்பாகவுள்ள  இந்நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளினியான கீகீ  சாந்தனு மற்றும்  ‘முரட்டு  சிங்கிள்  மிர்ச்சி’  விஜய்  உள்ளிட்ட  தீவிர  நடன  ஆர்வலர்கள் தொகுத்து வழங்குகின்றனர். 

இந்த நிகழ்ச்சியை  வசந்த் & கோ  ஸ்பான்சர்  செய்ய,  நிப்பான்  பெயிண்ட்ஸ்  மற்றும் எஸ்.கே.எம்.பூர்ணா  ரைஸ்  பிராண்ட்  ஆயில்  ஆகியோர்  சிறப்பு  பார்ட்னர்களாக இணைகிறார்கள்.

இந்த ‘டான்ஸ் Vs. டான்ஸ்’ நிகழ்ச்சி பற்றி கலர்ஸ்  தமிழ்  சேனலின்  தலைமை  செயல் அலுவலரான திரு. அனுப் சந்திரசேகரன் பேசுகையில், “இன்றைய  தொலைக்காட்சி இரசிகர்கள்  மற்றும்  பார்வையாளர்களின்  மன ஓட்டத்திற்கு ஏற்றவாறு  மாறுபட்ட நிகழ்ச்சிகளை  வழங்கியதன்  மூலம்தான்  ‘கலர்ஸ்  தமிழ்’ சேனல் அதன்  பயணத்தைத் தொடங்கியது. 

‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியின் வெற்றிக்குப் பிறகும், எங்களது  நிரந்தரமான இளம் ரசிகர்களின்  கவனத்தை  முழுமையாக  ஈர்க்கக் கூடிய  ஒரு  நிகழ்ச்சியை  வழங்க வேண்டுமென்று  நாங்கள்  விரும்பினோம்.  அதன்படி  திறமைமிக்க  நடன ஆர்வலர்களுக்கு ஒரு  தளத்தை  வழங்குகிற  தனித்துவமான  நிகழ்ச்சியாக இந்த `டான்ஸ் Vs டான்ஸ்’ நிகழ்ச்சி இருக்கும் என நம்புகிறோம்.

தொழில் நுட்ப  ரீதியாகவும்  படைப்பாற்றல் ரீதியாகவும்  இந்நிகழ்ச்சி  மிகச்  சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது.  பிருந்தா  மாஸ்டர்  மற்றும்  நடிகர் நகுலின்  வழிகாட்டலோடு தொகுப்பாளர்கள்  கீகீ  மற்றும்  விஜய்யின்  குறும்புமிக்க செயல்பாடுகள், பார்வையாளர்களைப்  பரவசப்படுத்தும்  என்று  நாங்கள்  உறுதியாக  நம்புகிறோம்…” என்றார். 

Oviya in DVD 1 

இந்த நடனப் போட்டி பற்றி பிரபல நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் பேசுகையில், “இந்த `டான்ஸ்  Vs  டான்ஸ்’  நிகழ்ச்சி  பார்வையாளர்களின்  பிரைம்  டைம்  பொழுது போக்குத் தேவையை  நேர்த்தியாக  உயர்த்தும்  வகையில்  சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்க்கிறது. 

வழக்கமான  நடன  நிகழ்ச்சியின்  வடிவத்திலிருந்து  இந்நிகழ்ச்சி முற்றிலும் மாறுபட்டிருக்கும்.  இதன்  முக்கிய  அம்சமாக  ஒரே  பாடலுக்கு  இரு  தனி நபர்கள்  ஒரே மேடையில் ஒரே நேரத்தில் நடனமாடி ரசிகர்களைப் பரவசப்படுத்துவார்கள்.  

நடனமாடுபவர்களின் ஸ்டைல், நேர்த்தி மற்றும் நடன அமைப்பில் படைப்பாக்கத் திறன் ஆகியவற்றின்  அடிப்படையில்  இவர்களது  நடனத் திறமை தீர்மானிக்கப்படும்.  இந்தப் போட்டியில்  படிப்படியாக  முன்னேற்றம்  காணும்போது  ஒவ்வொரு  போட்டியாளரும் அரியணையில்  அமர்வதற்கு  தீவிரமாக  போட்டியிடுவார்கள். இது  அவர்களைப் பாதுகாப்பாக  ஆக்குவதோடு,  போட்டியில்  முன்னேற்றம்  காண்பதற்கும்  உதவும்.

சென்னை மட்டுமின்றி,  உலகெங்கிலுமிருந்தும் திறமைமிக்க கலைஞர்களை வெளிப்படுத்துவதை நோக்கமாகக்  கொண்டு  ஒரு  புதிய  பயணத்தைத்  தொடங்குவதற்காக  கலர்ஸ் தமிழ் சேனலுடன்  கை கோர்த்திருப்பது  எனக்கு  பெரும் மகிழ்ச்சியைத்  தருகிறது..” என்றார்.

Nakul-1

திரைப்பட நடிகர் நகுல்  இந்த நடன நிகழ்ச்சி குறித்து  பேசுகையில், “தமிழ்  தொலைக்காட்சி தளத்தில்  ஒரு  நிகழ்ச்சியின்  நடுவராக  முதன்முறையாக  கால் பதிப்பதில்  நான்  ஆர்வமும், உற்சாகமும் கொண்டிருக்கிறேன்.  பிருந்தா  மாஸ்டர்  போன்ற  அனுபவமிக்க  நடன நிபுணரோடு  சேர்ந்து  பங்கேற்பதற்கு  ‘கலர்ஸ்  தமிழ்  சேனல்’ இப்போது எனக்கு  ஒரு  நல்ல வாய்ப்பை  வழங்கியிருக்கிறது. இப்பயணத்தின்போது  அதிகமான  நடன  அசைவுகளைக் கற்றுக் கொள்ள  நான்  ஆர்வத்தோடு  காத்திருக்கிறேன். 

இந்நிகழ்ச்சியின்  வடிவமானது  புதுமையானது.  தங்களது கற்பனைத் திறனை,  புதுமையான சிந்தனையை  வெளிப்படுத்தி  நடன  கலைஞர்கள் தங்களது திறமையை வெளிக்காட்ட நல்லதொரு  வாய்ப்பை  கலர் சேனல் வழங்குகிறது.  இதுவே  வழக்கமான மற்றைய நடன நிகழ்ச்சிகளிலிருந்து இதனை  வேறுபடுத்தி  நிலை  நிறுத்தியும் உள்ளது. 

உலகெங்கிலுமிருந்து இதில் பங்கேற்கவிருக்கும் திறமைமிக்க நடனக் கலைஞர்கள்  மீது ஒளி வெள்ளத்தைப்  பாய்ச்ச ‘கலர்ஸ் தமிழ் சேனல்‘ உருவாக்கியிருக்கும் சிறப்பான மாபெரும் மேடையான இந்த நிகழ்ச்சி  உண்மையிலேயே  பாராட்டுக்குரியதாகும். 

ஏராளமான  அற்புதமான  தருணங்களோடு,  குதூகலமும்,  உற்சாகமும்  நிறைந்த இப்பயணத்தை  மேற்கொள்ள  நானும்  ஆவலோடு  காத்திருக்கிறேன்…”  என்று  குறிப்பிட்டார் நடிகர் நகுல்.

இந்நிகழ்வில் பங்கேற்பதற்குத் திறமைமிக்க பேரார்வம் கொண்ட போட்டியாளர்களை கண்டறியும் திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே தொடங்கப்பட்டுவிட்டது. 8-வயதிலிருந்து 45-வயதுக்குட்பட்ட பல்வேறு வயது பிரிவுகளைச் சேர்ந்தவர்களிலிருந்து 70-க்கும்  அதிகமான  பங்கேற்பாளர்கள்,  தகுதி வாய்ந்த  நடன  நிபுணர்கள்  அடங்கிய குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உலகத் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த ‘கலர்ஸ் தமிழ் சேனல்’ தற்போது அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் சன் – டைரக்ட் (CHANNEL NO : 128), டாடா ஸ்கை (CHANNEL NO : 1555), ஏர்டெல் (CHANNEL NO : 763), டிஷ் டிவி (CHANNEL NO : 1808)  மற்றும்  வீடியோகான் D2H (CHANNEL NO : 553)  ஆகிய  அனைத்து  DTH  தளங்களிலும்  காணக் கிடைக்கிறது. 

Our Score