full screen background image

புதுச்சேரி முதல்வர் துவக்கி வைத்த ‘சினிமா கிறுக்கன்’ திரைப்படம்!

புதுச்சேரி முதல்வர் துவக்கி வைத்த ‘சினிமா கிறுக்கன்’ திரைப்படம்!

மகிழ் புரொடக்சன்ஸ் சார்பில், சி.பியூலா தயாரிப்பில், தக்‌ஷன் விஜய் எழுத்தில் உருவாகும் “சினிமா கிறுக்கன்” படத்தை, சமூக விரோதி, பொதுநலன் கருதி ஆகிய படங்களை இயக்கிய சீயோன் ராஜா இயக்குகிறார்.

இந்தப் படத்தில் கதாநாயகன் தக்‌ஷன் விஜயின் அப்பாவாக பிரபல இயக்குநர் ஜி.ம்.குமார் நடிக்கிறார். அம்மாவாக தனுஷின் அம்மாவாக ‘கர்ணன்’ படத்தில் நடித்த ‘வாழை’ ஜானகி நடிக்கிறார். மேலும் விஜய் டிவி அமுதவாணன், லொள்ளுசபா ஜீவா, சாகிதா சுகன்யா, விதுஷ்னியா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனத்தை தக்‌ஷன் விஜய் எழுதுகிறார். இயக்கம் – சீயோன் ராஜா. ஒளிப்பதிவு வினு பெருமாள், இசை ஷ்யாம், பத்திரிக்கை தொடர்பு கோவிந்தராஜ், தயாரிப்பு – சி.பியூலா.

தக்‌ஷன் விஜய் இந்தப் படத்திற்காக தாடி வளர்த்து, புதிய தோற்றத்தில், புதிய பரிமாணத்தில் நடிக்கிறார்.

படப்பிடிப்பு பாண்டிச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெறுகிறது.

இந்தப் படத்தை மகிழ் புரொடக்சன்ஸ் சார்பில், சி.பியூலா பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்!

Our Score