full screen background image

“மீரா மிதுனை நடிக்க வைத்ததையே சினிமாவா எடுக்கலாம்” – இயக்குநர் செல்வ அன்பரசனின் சோக அனுபவம்

“மீரா மிதுனை நடிக்க வைத்ததையே சினிமாவா எடுக்கலாம்” – இயக்குநர் செல்வ அன்பரசனின் சோக அனுபவம்

“மீரா மிதுனை வைத்து படம் எடுத்த கதையையே இன்னொரு சினிமாவாக எடுக்கலாம்” என்று ‘பேய காணோம்’ படத்தின் இயக்குநரான செல்வ அன்பரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ‘பேய காணோம்’ படத்தின் விழாவில் இயக்குநர் செல்வ அன்பரசன் பேசும்போது, “அந்தக் காலத்தில் படம் எடுக்கறது கஷ்டம்; ரிலீஸ் பண்றது சுலபம். ஆனால் இப்போது படம் எடுக்கறதும் கஷ்டம்; ரிலீஸ் பண்றது அதைவிடவும் ரொம்ப ரொம்ப கஷ்டம். இந்தப் படத்தை வெளியிடும் HI CREATORS நிறுவனத்திற்கும் என் வாழ்க்கை முழுதும் நன்றி கடனாக இருப்பேன்.

இந்த படத்தை எப்படியெல்லாம் ரீச் பண்ண முடியுமோ அந்த அளவுக்கு ரீச் பண்ணியிருக்கோம். முதல்ல இந்தப் படத்தோட டைட்டில் ரீச் ஆகணும்னு நினைச்சேன். அதற்கு சப்போர்ட்டா மூணு பேர் இருந்தாங்க.

ஒண்ணு பி.ஆர்.ஓ. மணவை புவன், இரண்டாவது பத்திரிகையாளர்கள், மற்றும் ட்ரோலர்ஸ் முக்கியமாக டுடே ட்ரெண்டிங், அகமது மீரான், அருணோதயன் , மிஸ்டர் மிதுன், ட்யூட் அஸ்வின் போன்ற மீம் கிரியேட்டர்ஸ் மூணாவதா எங்க அக்கா மீரா மிதுன் வேற லெவல் புரோமோட்டரா இருந்தார்.

மீரா மிதுனை வைத்து படம் எடுத்த கதையையே 50 படங்களாக பார்ட் பார்ட்டாக எடுக்கலாம். அவ்வளவு சம்பவங்கள் இருக்கு.

இப்போ வர்ற படங்களெல்லாம் பெரிய நடிகர் நடித்திருந்தாலும், சின்ன நடிகர் நடித்திருந்தாலும் முதல் நாள் மட்டும்தான் நல்லா போகுது. இரண்டாவது நாள் ஓடுறதுக்குள்ள விமர்சனங்கள் வெளியாகி படத்தை காலி செய்து விடுகிறார்கள். விமர்சனம் செய்பவர்களுக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை ஏறிக்கிட்டே போகுது. ஆனால், தியேட்டரில் பார்வையாளர்கள் குறைந்து கொண்டே போகிறார்கள்.

விமர்சனம் பண்றது தப்பில்லை. நானும் மீடியாவில் இருந்தவன்தான் ஆனால் நாகரீகமாக விமர்சனம் பண்ணணும். படத்திற்கு மார்க் போடுவதில் இன்றைக்கு வரைக்கும் ஆனந்த விகடன் சினிமாவை தாழ்த்தியே வச்சிருக்கு.

’16 வயதினிலே’ படத்துக்கு கொடுத்த 62-1/2 மார்க்தான் இதுவரை அதிகப்பட்சமான மார்க்காக இருக்கிறது. அதற்காக பாரதிராஜாவை இதுவரைக்கும் பெருமையா பேசிட்டு இருக்கோம். இது பெருமை இல்லை கேவலம். ஏன்னா பாரதிராஜா சார் நூற்றுக்கு நூறு வாங்கக் கூடிய இயக்குநர். ஏன் 60-க்கு மேல மார்க் வாங்குற இயக்குநர்களே இல்லையா? இது ஒட்டு மொத்த சினிமாவையும், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வயிற்றிலும் அடிக்குது…” என்றார்.

Our Score