இசையமைப்பாளர்கள், பாடகர்கள், பாடகிகள், கவிஞர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கும் தென்னிந்திய சினிமா இசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி 2018-2020 காலக்கட்டத்திற்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய நேற்று வடபழனியில் உள்ள அவர்களது சங்க அலுவலகத்தில் தேர்தல் நடைபெற்றது
இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு கல்யாணசுந்தரம் மற்றும் தினா இருவரும் போட்டியிட்டனர்.
இதில் இசையமைப்பாளர் தினா அதிக வாக்குகள் பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செயலாளர் பதவிக்கு சாரங்கபாணி – P.G.வெங்கடேஷ் இருவரும் போட்டியிட்டதில் சாரங்கபாணி வெற்றி பெற்றார்.
குருநாதன் – ரங்கராஜன் இருவரும் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டதில் குருநாதன் வெற்றி பெற்றார்.
உப தலைவர்களாக மகேஷ், பாலேஷ், கோபிநாத் சேட், வீரராகவன் நால்வரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இணைச் செயலாளர்களாக பி.செல்வராஜ், பி.வி.ரமணன், R.செல்வராஜ், P.பாஸ்கர், ஜோனா பக்தகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இசைக் கலைஞர்கள் சங்கத்தின் அறக்கட்டளை பொறுப்பாளர்களுக்காக நடந்த தேர்தலில் போட்டியிட்ட ஐந்து பேரில் இசையமைப்பாளர் S.A.ராஜ்குமார், தினா, குருநாதன் மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களின் பதவியேற்பு விழா வரும் 27-ம் தேதி நடக்கிறது.